7 மாநிலங்களுக்கு, 8 ரயில்வே திட்டங்கள்.. மத்திய அரசின் திட்டம் என்ன..?

இந்தியாவில் போக்குவரத்தையும், மாநிலங்களுக்கு மத்தியிலான இணைப்புகளை மேம்படுத்துவும், கச்சா எண்ணெய் பயன்பாட்டை குறைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த வாரம் கிழக்கு மாநிலங்களின் மேம்பாட்டைக் குறிவைத்து எட்டு முக்கிய ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ.24,657 கோடி ஆகும்.

இந்த புதிய திட்டம் ஓடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார், தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் 14 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.

 7 மாநிலங்களுக்கு, 8 ரயில்வே திட்டங்கள்.. மத்திய அரசின் திட்டம் என்ன..?

இந்த திட்டங்கள் விவசாயப் பொருட்கள், உரங்கள் போன்ற பொருள்களை கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருடத்துக்கு 143 மில்லியன் டன் பொருட்களை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் மூலம் சுற்றுச்சூழலுக்கு உகந்த சிறப்பான போக்குவரத்தையும், போக்குவரத்து செலவுகளைக் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும், கார்பன்டை ஆக்ஸைடை உமிழ்வை குறைக்கவும் இந்த திட்டம் பயன்படும். இது 3.5 கோடி மரங்களை நட்டதற்கு சமமாகும்.

இந்த புதிய ரயில்வே திட்டத்தில் 64 புதிய ரயில்நிலையங்கள் கட்டப்பட்டு கிழக்கு சிங்பம், பதாரிகொத்தகுடம், மல்கன்கிரி, கலாஹண்டி, நமபாங்பூர், ராயகடா ஆகிய மாவட்டங்களை இணைக்கப்படுகிறது. இதனால் 510 கிராமத்தை சேர்ந்த 40 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.

அத்துடன் யுனஸ்கோ உலக பாரம்பரிய தளமான அஜந்தா குகைகள் இந்தியாவின் ரயில்வே நெட்வொர்க்கில் சேர்க்கப்பட்டு ஏராளமான சுற்றுலா பயணிகளை கவரும்.
அண்மையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024 பட்ஜெட்டில் மும்பை அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்துக்காக ரூ.25,000 ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இடைக்கால பட்ஜெட்டில் ரூ.21,000 கோடியாக குறைக்கப்பட்டது.

மேலும் சரக்கு வழித்தடங்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு ரூ.8155 கோடி செலவிடப்படும். புதிய அரசின் 100 நாள் வேலைத் திட்டத்தில் ரயில்வேயில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது.

இதில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள், வந்தே பாரத் மெட்ரோ ரயில்களும் அடங்கும். தற்போது பகல்நேர அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலாக சதாப்தியும் இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயிலாக ராஜதானி ரயில்களும் இயங்குகின்றன. சதாப்தி ரயில்கள் இப்போது 82க்கும் மேற்பட்ட தடங்களில் இயங்குகின்றன.

அவற்றுக்குப் பதிலாக வந்தே பாரத் ரயில்களும், ராஜதானி ரயில்களுக்குப் பதிலாக வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களும் இயக்கப்பட உள்ளன. சதாப்தி ரயில்களும் ராஜதானி ரயில்களும் படிப்படியாகக் குறைத்து நிறுத்தப்படும். அவற்றுக்குப் பதிலாக இனி வந்தே பாரத் ரயில்களும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களும் இயக்கப்படும். தற்போது அறிவிக்கப்பட்டுள் இந்த எட்டு முக்கிய ரயில்வே திட்டங்கள் இந்திய பொருளாதார மேம்பாட்டுக்கு மிகவும பயனுள்ளதாகும்.

Story written by: Jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+