ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் வாரி சுருட்டிக்கொள்ளும் சீனா.. எதுவும் செய்ய முடியாமல் தவிக்கும் EU!

சீனாவின் வளர்ச்சி நாளுக்கு நாள் வல்லரசு நாடுகளை மிரளவைத்து வருகிறது, இதேபோல் உலக நாடுகள் சீனா மலிவான, தரமற்ற பொருட்களை உலக நாடுகளில் அதிகளவில் விற்பனை செய்வதால் அந்நாட்டின் வர்த்தக சந்தை மிகவும் மோசமான தாக்கத்தை எதிர்கொள்வதாக குற்றம்சாட்டி வருகிறது.

இதனால் அமெரிக்கா, ஐரோப்பா என உலகின் பல நாடுகள் சீனா பொருட்களின் இறக்குமதிக்குக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்கும் முயற்சியில் கடந்த 5 வருடங்களாகத் தீவிரமாக இறங்கியுள்ளது.

ஆனால் சீனா புதிய திட்டத்தைக் கையில் எடுத்து ஐரோப்பாவைக் கலங்கடித்து வருகிறது.

 ஒட்டுமொத்த ஐரோப்பாவையும் வாரி சுருட்டிக்கொள்ளும் சீனா.. எதுவும் செய்ய முடியாமல் தவிக்கும் EU!

சீனா பொருட்களுக்கான இறக்குமதியைத் தடுக்க ஐரோப்பிய நாடுகளின் வர்த்தகக் கட்டுப்பாடுகள், தடைகளை எதிர்கொள்வதற்குப் பதிலாக, ஐரோப்பிய நாடுகளிலேயே தொழிற்சாலைகள், உற்பத்தி மையங்கள் மற்றும் சப்ளையர் கட்டமைப்புகளைச் சீன நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன.

இதனால் வர்த்தக தடை என்ற பேச்சுக்கே இடமில்லாமல், ஒட்டுமொத்த ஐரோப்பியச் சந்தையை வாரிச் சுருட்டிப்போட்டு வருகிறது சீனா. குறிப்பாக கெமிக்கல், இயந்திரங்கள், நவன் உற்பத்தி உபகரணங்கள், ஆட்டோமொபைல் போன்ற துறைகளில் சீன நிறுவனங்களின் ஆதிக்கம் ஐரோப்பியச் சந்தையில் ஆதிக்கம் செலுத்துவது மட்டும் அல்லாமல் அந்நாட்டு நிறுவனங்களுக்குக் கடுமையான சூழ்நிலைக்குத் தள்ளி வருகிறது.

Also Read

இதேவேளையில் சீனா நிறுவனங்கள் மலிவான விலையில் தரமான பொருட்களைத் தயாரிக்கும் சூட்சமத்தை கண்டுப்பிடித்திருக்கும் காரணத்தால் ஐரோப்பிய நிறுவனங்களின் ஆதிக்கம் பல துறையில் வேகமாகக் காணாமல் போகிறது.

உதாரணமாக ஐரோப்பாவில் வோக்ஸ்வேகன் 1 லட்சத்திற்கும் அதிகமான தொழிற்சாலை ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருவது மட்டும் அல்லாமல் பல தொழிற்சாலைகளை மொத்தமாக மூடுவதற்கும் தயாராகியுள்ளது.

சீனா முதலில் ஜெர்மனி, பிரான்ஸ் மட்டுமே சீனாவின் முக்கிய முதலீட்டு இலக்காக இருந்த நிலையில் தற்போது சீனா நிறுவனங்கள் தனது முதலீட்டை மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு விரிவாக்கம் செய்து வருகிறது. குறிப்பாக ஈவி பேட்டரிகள், எலக்ட்ரிக் வாகன துறையில் அதிகளவில் முதலீடு செய்து வருகிறது.

Recommended For You

இதற்காகச் சீனாவின் CATL, BYD, Sunwoda, Gotion போன்றவை பெரும் தொகையை முதலீடு செய்து பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி தொழிற்சாலையை அமைத்து வருகிறது. இதேபோல் சீனாவின் Geely நிறுவனத்துக்குச் சொந்தமான Volvo கார் தொழிற்சாலையும் அமைகிறது. Minth, SHAC, BMTS Technology, Xingyu Automotive உள்ளிட்ட நிறுவனங்களின் முதலீட்டின் மூலம் ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் உற்பத்தியில் இறங்கியுள்ளது.

இதனால் சீனா - ஐரோப்பாவுக்கும் மத்தியிலான வர்த்தக பற்றாக்குறை 2014ல் 100 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 2025ல் 370 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

சீனாவின் முதலீடு என்பது ஐரோப்பாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது, பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது, எலக்ட்ரிக் வாகனப் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டை அதிகரிக்கிறது.

ஆனால் மறுமுனையில் பல துறையில் ஐரோப்பா, சீன நிறுவனங்களை அதிகம் சார்ந்திருக்க வேண்டிய நிலை உருவாகி வருகிறது என்ற கருத்து நிலவ துவங்கியுள்ளது. சீன இறக்குமதிக்கு முட்டுக்கட்டை போட்ட ஐரோப்பா முயற்சி செய்த நிலையில் சீன நிறுவனங்கள் முதலீட்டின் வழியாக வந்து ஐரோப்பியச் சந்தையைக் கைப்பற்றி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+