பாட்டிலுக்கு 10 ரூபா.. டாஸ்மாக் ஊழியர்கள் உடனடி சஸ்பெண்ட்.. விக்னேஷ் வெளியிட்ட பரபர உத்தரவு!

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிக்கும் நடைமுறை தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில் இதை கட்டுப்படுத்த அதிரடியான நடவடிக்கையை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் க.விக்னேஷ் இன்று சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ளாார்.

இன்று சட்டமன்ற கூட்டத்தில் அமைச்சர் விக்னேஷ் மதுவிலக்கு துறை சார்ந்த ஆறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் பெரும்பாலான அறிவிப்புகல் கள்ளச்சாராயம் ஒழிப்பதிலும், அதை சார்ந்தவர்கள் குறித்து இருந்தாலும். 2 அறிவிப்புகள் மிகவும் முக்கியமானதாக இருந்தது.

பாட்டிலுக்கு 10 ரூபா.. டாஸ்மாக் ஊழியர்கள் உடனடி சஸ்பெண்ட்.. விக்னேஷ் வெளியிட்ட பரபர உத்தரவு!

முதல் அறிவிப்பு தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தை முற்றிலுமார ஒழிக்க வலுவான மெத்தனால் பயன்பாட்டு கொள்கை உருவாக்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் அறிவித்தார்.

2வது அறிவிப்பு டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிக்கும் ஊழியர்கலள் மீதான நடவடிக்கை குறித்து வந்த அறிவிப்பு.

சட்டமன்றத்தில் அமைச்சர் விக்னேஷ் பேசுகையில் டாஸ்மாக் பணியாளர்கள் இனி மதுபான பாட்டில்களை MRP விலையை தாண்டி கூடுதல் விலைக்கு விற்றால் அரசு மிக கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்பதை பேரவை தலைவர் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன் தெவித்தார்.

மேலும் அவர் பேசுகையிவ் டாஸ்மாக் நிர்வாகத்தால் கடந்த 2019ல் வெளியிடப்பட்ட அறிவிப்பில், டாஸ்மாக் ஊழியர்கள் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றால்.. அதாவது 1 ரூபாயல் இருந்து 9 ரூபாய் வரைக்கும் கூடுதலாக வசூலிக்கப்பட்டால் அவர்களுக்கு வெறும் அபராதம் மட்டும் தான் விதிக்கப்பட்டது.

Also Read

ஆனால், இனி தவெக ஆட்சியில் பாட்டிலுக்கு 1 ரூபாய் வசூல் செய்தால் கூட மிக கடுமையாக தண்டணை கிடைக்கும். முதல் முறை தவறு செய்து கண்டறியப்பட்டால் 3 மாதங்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படும். மீண்டும் அதே நபர், அடுத்த முறையும் அதே தவறு செய்தால் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவித்துக்கொள்கிறோம் என அமைச்சர் விக்னேஷ் அறிவித்தார்.

Recommended For You

இதை தொடர்ந்து அவர் பேசுகையில் இதன் மூலம் நாங்கள் சொல்ல வருவது என்னவென்றால் எந்த துறையிலுமே தவெக ஆட்சியில் ஊழல் இருக்கக்கூடாது, அது நுகர்வோரிடம் இருந்து வாங்கக்கூடிய பணமாக இருந்தாலும் சரி, அரசுக்கு வர வேண்டிய பணமாக இருந்தாலும் சரி, எந்த விதத்திலும் தவெத அரசு இதை ஏற்றுக் கொள்ளாது என்பதை தெரிவித்து கொள்வதாக விக்னேஷ் பேசினார்.

தேர்தல் பிரச்சாரத்தில் பாட்டிலுக்கு 10 ரூபா விவகாரம் பெரும் விவாத பொருளாக இருந்த நிலையில், விஜய் தலைமையிலான ஆட்சியில் பல கட்டுப்பாடுகள், பல எச்சரிக்கைளை விடுக்கப்பட்ட நிலையிலும் பாட்டிலுக்கு 10 ரூபாய், 20 ரூபாய் வசூலுக்கும் விவகாரம் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. சமீபத்தில் கூட பலர் தங்களுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோக்கள் செய்திகளில் வந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+