இந்திய ராணுவத்திற்கு தேவையான பெரும்பாலான ஆயுதங்கள் உள்நாட்டிலேயே தாயாரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பல வெளிநாட்டு நிறுவனங்கள் உடன் இணைந்து துப்பாக்கி முதல் நீர்மூழ்கி கப்பல் வரையில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தியா ராணுவத்திற்காக டாடா குழுமத்தின் கிளை நிறுவனம் சீனா, பாகிஸ்தான் எல்லை பாதுக்காப்பை பலப்படுத்த புதிய செயற்கைகோள்-ஐ உருவாக்க உள்ளது. இந்த செயற்கைகோள் எதற்காக..? இந்த செயற்கைக்கோள் என்ன செய்யும்..?

டாடா குழுமத்தின் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) நிறுவனம் உயர்தர தெளிவுத்திறன் கொண்ட இமேஜரி செயற்கைக்கோள்களை தயாரிக்க புதிய தொழிற்சாலையை அமைத்துள்ளது. இந்த செயற்கைகோள் மூலம் சீனா, பாகிஸ்தான் எல்லையில் மேம்பட்ட முறையில் கண்காணிக்க முடியும்.
ராணுவ விண்வெளித் துறை அதாவது விண்வெளி பயன்பாட்டின் மூலம் ராணுவத்தை பலக்கும் முயற்சி-யின் ஒரு பகுதியாக இந்திய ஆயுதப்படைகள் எல்லைப் பகுதிகளை உன்னிப்பாகக் கண்காணிக்க டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனம் அதீத ரெசல்யூஷன் கொண்ட புகைப்படங்களை எடுக்கும் இமேஜரி செயற்கைக்கோள்களை தயாரிக்கும் புதிய தொழிற்சாலையை அமைத்துள்ளது.
பெங்களூரில் அமைக்கப்பட்டு உள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையில் சப் மீட்டர் ரெசல்யூஷன் செயற்கைக்கோள்களை தயாரிக்க உள்ளது. இதோடு பெங்களூரில் செயற்கைக்கோள்களை நிர்வாகம் செய்ய கிரவுண்ட் ஸ்டேஷன் அமைக்கப்பட உள்ளது.
இந்த கிரவுண்ட் ஸ்டேஷன் மூலம் செயற்கைக்கோள்களின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்பதால் இந்திய எல்லையில் ராணுவ உள்கட்டமைப்பை கண்காணிக்கவும், ராணுவத்தின் டார்கெட் இடத்திற்கு தேவையான புகைபடங்களை பெற முடியும். இதற்காக டாடா குழுமம் 24 low earth orbit (LEO) செயற்கைகோளை தயாரிக்க உள்ளது.
டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனம் இந்த தொழிற்சாலை அமைப்பதற்காக லத்தின் அமெரிக்கா நாட்டை சேர்ந்த Satellogic உடன் கூட்டணி சேர்ந்துள்ளது. அடுத்த 6 மாதத்தில் 0.5 மீட்டர் ரெசல்யூஷன் கொண்ட செயற்கைகோள்களை தயாரிக்க உள்ளது இக்கூட்டணி.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications