இந்தியாவில் உற்பத்தி துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் பல துறைகளுக்கு புதிதாக உற்பத்தி தளம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதுநாள் வரையில் விமான சேவை நிறுவனங்களுக்கு மென்பொருள் சேவை அளித்து வந்த டாடா, தற்போது விமான போக்குவரத்து சேவையில் இறங்கியது மட்டும் அல்லாமல் தற்போது விமானங்களுக்கான உதிரிபாகங்களை தயாரிக்க உள்ளது.
ஏர்பஸ் நிறுவனத்தின் முக்கிய விமானமான ஏ320 நியோ விமானங்களுக்கான பல்க் கார்கோ மற்றும் கார்கோ கதவுகளை டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்று ஐரோப்பிய ஏவியேஷன் நிறுவனமான ஏர்பஸ் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத்தில் தயாரிப்பு!
ஏர்பஸின் அறிக்கையின்படி, ஹைதராபாத்தில் உள்ள புதிய தளத்தில் அதிநவீன ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி TASL அதாவது டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனம் ஏ320 நியோ விமானங்களுக்கான பல்க் கார்கோ மற்றும் கார்கோ கதவுகளை தயாரிக்கும் என தெரிவித்துள்ளது.
இரண்டாவது பெரிய ஒப்பந்தம்!
டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா சமீபத்தில் 470 விமானங்களுக்கான ஆர்டர் செய்த சில வாரங்களுக்குப் பிறகு, ஏர்பஸ் உடனான இந்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வந்துள்ளது. டாடா குழுமம் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து சுமார் 270 விமானங்களை வாங்க உள்ளது.
ஏர்பஸ்!
ஏர்பஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட இந்திய சப்ளையர்களிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் 735 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பாகங்கள் மற்றும் சேவைகளை வாங்கி வருகிறது.
இந்த ஒப்பந்தம் மூலம் single-aisle விமான சந்தையில் ஏர்பஸின் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கும், ஏ320 திட்டத்தை மேம்படுத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் ஒரு படி முன்னேற்றமாக இருக்கும் என்று ஏர்பஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேக்-இன் -இந்தியா!
இந்தியாவின் ஆத்மநிர்பார் திட்டத்தின் மேக் -இன் -இந்தியா உறுதிப்பாட்டை மேம்படுத்துவதில் இந்த ஒப்பந்தம் முக்கிய பங்களிக்கும் என ஏர்பஸ் இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான ரெமி மெயிலார்ட் கூறியுள்ளார்.
ஆத்மநிர்பர் பாரத் இலக்கு
இந்தத் திட்டம் மூலம் உற்பத்தியில் அதிநவீன வடிவமைப்பு, உதிரிபாகங்கள் உற்பத்தி, விமானங்களின் அசெம்பிளி போன்ற தயாரிப்புகளால்'ஆத்மநிர்பர் பாரத்' என்ற இந்திய அரசின் லட்சியத்தை முழுமையாக நிவர்த்தி செய்யும் என கூறப்படுகிறது.
குஜராத்
இதுதவிர ஏர்பஸ் நிறுவனம் குஜராத்தில் உள்ள TASL உடன் C295 இராணுவ விமான இறுதி அசெம்பிளி லைனை (FAL) உருவாக்கும், இது தனியார் துறையில் முதல் பெரிய உற்பத்தி திட்டமாகும் என ஏர்பஸ் தெரிவித்துள்ளது.
நம்பகத்தன்மை!
TASL உடனான இந்த ஒப்பந்தம் ஒரு வலுவான நம்பிக்கையை உருவாக்கும் எனவும், இந்தியாவில் ஏர்பஸ் நிறுவனத்தின் தொழில்துறையை மற்றும் விமானச் சேவையில் வேகமாக வளரும் என ரெமி மெயிலார்ட் கூறியுள்ளார்.
முன்னேற்றம்
இந்த ஒப்பந்தம் குறித்து Tata Advanced Systems Ltd (TASL) இன் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சுகரன் சிங் கூறுகையில், TASL நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்துடன் தொடர்ந்து நல்ல வணிக உறவைக் கொண்டுள்ளது எனவும், இந்த ஒப்பந்தம் மூலம் விமான பாகங்களின் தயாரிப்பு இரண்டு நிறுவனங்களுக்கும் இடையேயான உறவை மேலும் மேம்படுத்தும் எனக் கூறியுள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications