இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் ஒரு முக்கியமான மைல்கல்லை அடைய, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்பானிஷ் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் குஜராத்தின் வடோதராவில் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட்டின் (TASL) புதிய C-295 விமான உற்பத்தி ஆலையை திறந்து வைத்தனர். இந்த வசதி, ராணுவ விமானங்களுக்கான இந்தியாவின் முதல் தனியார் துறை ஆலை ஆகும்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, இந்த திட்டத்தை இந்திய விமானத் துறைக்கு "மிகவும் சிறப்பு வாய்ந்த நாள்" என்றும், "C-295 திட்டம் இந்திய தனியார் தொழில்துறைக்கு ஒரு பெரிய சாதனை என்றும், இந்த நிறுவனம் இந்தியாவில் இராணுவ விமானத்தை தயாரிக்கும்" என்றும் பாராட்டி பேசினார்.

C-295 திட்டம்: 2021-ஆம் ஆண்டில், இந்திய விமானப்படையின் மிகவும் பழைய மாடலான அவ்ரோ-748 விமானங்களுக்குப் பதிலாக 56 புதிய சி-295 போக்குவரத்து விமானங்களை தயாரிப்பதற்காக ஏர்பஸ் டிஃபென்ஸ் மற்றும் ஸ்பேஸ் எஸ்ஏ, ஸ்பெயினுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ரூ.21,935 கோடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், 16 விமானங்கள் ஸ்பெயினில் இருந்து முழுமையாக அசெம்பிள் செய்யப்பட உள்ளன, மீதமுள்ள 40 விமானங்கள் வதோதராவில் உள்ள புதிய TASL இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட உள்ளன. அதிகாரிகளின் கூற்றுப்படி, வதோதராவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் விமானம் செப்டம்பர் 2026-க்குள் முடிக்கப்படும் மற்றும் ஆகஸ்ட் 2031-ஆம் ஆண்டுக்குள் அனைத்து யூனிட்களும் டெலிவரி செய்யப்படும் என்று கூறியுள்ளார்.
வதோதரா விமான தயாரிப்பு ஆலையானது, விமானத்தை அசெம்பிள் செய்வதோடு மட்டுமல்லாமல், உதிரிபாக உற்பத்தியில் இருந்து அசெம்பிளி, சோதனை மற்றும் இறுதி விநியோகம் வரை முழுமையான உற்பத்தியைக் கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"ஏரோ-எஞ்சின் மற்றும் ஏவியானிக்ஸ் தவிர, ஏர்பஸ் மற்ற OEM-களிலிருந்து பெறும் மற்ற பாகங்கள் பெரும்பாலும் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. ஒரு விமானத்தில் பயன்படுத்தப்படும் 14,000 பாகங்களில், 13,000 பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும்" என்று அதிகாரப்பூர்வ ஆதாரத்தில் இருந்து தகவல் வந்துள்ளது.
உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோகத்தை விரிவுபடுத்துதல்: டாட்டா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் மற்றும் ஏர்பஸ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் அமைக்கப்பட இருக்கும் வதோதரா ஆலை உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும். அதோடு தற்போது ராணுவ உபகரணங்களுக்காக வெளிநாட்டை நம்பி இருக்கும் நிலையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏர்பஸ் ஏற்கனவே 37 உள்ளூர் சப்ளையர்களை அடையாளம் கண்டுள்ளது. அவற்றில் 33 சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) தாங்கும், அவை பல்வேறு விமான பாகங்களைத் தயாரிக்கின்றன. ஒவ்வொரு C-295 விமானத்திலும் உள்ள சுமார் 14,000 பாகங்களில், கிட்டத்தட்ட 13,000 பாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த ஆலை நிறுவப்பட உள்ளது.
C-295-இன் மேம்பட்ட திறன்கள் என்ன?: C-295 விமானம் 5-10 டன் போக்குவரத்து திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் இந்திய விமானப்படையில் பல ஆண்டுகளாக சேவை செய்த Avro-748 விமானங்களை இந்த C-295 விமானம் மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா-ஏர்பஸ் இணைந்து 600 நேரடி உயர் திறன் கொண்ட வேலைகள், 3,000-திற்க்கும் மேற்பட்ட மறைமுக வேலைகள் மற்றும் கூடுதலாக 3,000 நடுத்தர திறன் கொண்ட வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications