இந்திய விமான போக்குவரத்து துறையில் மிகப்பெரிய மாற்றத்தை செய்ய காத்திருக்கும் ஏர் இந்தியா, 70 பில்லியன் டாலர் மதிப்பில் 470 விமானங்களை வாங்கி இந்தியாவை உலக நாடுகள் உடன் நெருங்கி இணைக்க உள்ளது.
இந்த புதிய பயணத்தில் டாடா குழுமம் ஏர் இந்தியாவுக்கு கீழ் தன்னுடைய விஸ்தாரா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் ஏசியா இந்தியா ஆகியவற்றை ஒன்றாக இணைத்து ஒரே பிராண்டாக உலகம் முழுவதும் பறக்க உள்ளது. இதற்காக டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் மற்றும் ஏர் இந்தியாவின் சிஇஓ கேம்பிள் வில்சன் புதிய ஏர் இந்தியா லோகோ மற்றும் விமான டிசைன்களை வெளியிட்டனர்.

ஏர் இந்தியாவில் புதிய லோகோ மற்றும் விமான டிசைன் மக்கள் மத்தியில் கவவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும், புதிய தலைமை, புதிய பிராண்டின் கீழ் சிறப்பான வாடிக்கையாளர் சேவை தரத்துடன், உரிய நேரத்தில் விமானம் இயங்குவது போன்ற அடிப்படையை சரி செய்தாலே போதும் என பலரும் கூறிவருகின்றனர்.
இப்படியிருக்கையில் ஏர் இந்தியா எத்தனை முறை தனது லோகோ-வை மாற்றியுள்ளது தெரியுமா.. கடந்த 91 வருட வரலாற்றில் பல தலைமைகள் மாறி மாறி பெரும் இழப்புக்கும், தோல்விக்கும் பின்பு டாடா குழுமத்தின் கையில் வந்துள்ளது. இந்த 90 வருட பயணத்தை நினைவுகூறும் வகையில் ஒரு போட்டோ வெளியாகியுள்ளது.

ஏர் இந்தியா-வை மத்திய அரசிடம் வாங்குவதில் டாடா குழுமம் அதிகப்படியான ஆர்வம் காட்ட முக்கியமான காரணம் உண்டு. 69 வருடத்திற்கு முன்பு ஏர் இந்தியா என்ற பெயர் டாடா ஏர்லையன்ஸ் ஆக இருந்தது. இதை உருவாக்கியது யார் தெரியுமா..?
ஏப்ரல் 1932ஆம் ஆண்டில் ஜே.ஆர்.டி டாடா (Jehangir Ratanji Dadabhoy Tata aka J.R.D.Tata) டாடா சன்ஸ் நிறுவனத்தின் கீழ் விமானப் போக்குவரத்து பிரிவை உருவாக்கி அதன் கீழ் டாடா ஏர் சர்வீசஸ் என்ற நிறுவனத்தை உருவாக்கினார். முதலில் இந்த நிறுவனம் தபால்களை ஏற்றிச் செல்லும் சேவைக்காக உருவாக்கப்பட்டது.
இதற்காக ஜே.ஆர்.டி டாடா ஒற்றை இன்ஜின் கொண்ட de Havilland Puss Moths இரு விமானத்தை வாங்கிச் சேவையைத் துவங்கினார். இந்தியாவில் தபால்களை டெலிவரி செய்யும் வர்த்தகத்தை பிரிட்டன் அரசின் இம்பீரியல் ஏர்வேஸ் நிறுவனத்திடம் டாடா கைப்பற்றினார். முதல் தபால் டெலிவரி சேவையைக் கராச்சியில் இருந்து பாம்பே-வுக்குச் செய்யப்பட்டது, பின்பு மெட்ராஸ்-க்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.
டாடா ஏர் சர்வீசஸ் மூலம் பயணிகள் விமானச் சேவை சூடுபிடிக்கத் துவங்கிய காரணத்தால் பயணிகள் விமானச் சேவைக்காகவே ஜே.ஆர்.டி டாடா, 1938ல் டாடா ஏர் சர்வீசஸ் நிறுவனத்தை டாடா ஏர்லையன்ஸ் ஆக மாற்றினார். பின்பு பயணிகள் விமானச் சேவையை மற்றும் தபால் பரிமாற்ற சேவை கார்ச்சி - டெல்லி - பாம்பே - மெட்ராஸ் - சிலோன் வரையில் விரிவாக்கம் செய்யப்பட்டது.
2ஆம் உலகப் போருக்கு பின்பு பல வர்த்தக மாற்றங்கள் நடந்த பின்பு ஜூலை 1946ல் பொது நிறுவனமாக மாற்றப்பட்டு முழுப் பயணிகள் சேவை நிறுவனமாக மாற்றப்பட்டது.
இந்திய சுதந்திரத்திற்குப் பின்பு 1948ல் இந்திய அரசு பயணிகள் விமானச் சேவை துவங்க வேண்டும் திட்டமிட்ட நிலையில் டாடா குழுமத்தின் டாடா ஏர்லையன்ஸ் நிறுவனத்தில் 49 சதவீத பங்குகளைக் கைப்பற்றியது. இதன் பின்பு 1953ல் இந்திய அரசு, ஏர் கார்பரேஷன்ல் சட்டத்தை அறிமுகம் செய்து ஜே.ஆர்.டி டாடா மூலம் டாடா சன்ஸ் நிறுவனத்தில் இருந்த டாடா ஏர்லையன்ஸ் நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை அரசு கைப்பற்றியது. இதன் பின்பு டாடா ஏர்லையன்ஸ் நிறுவனத்தை ஏர் இந்தியா எனப் பெயர் மாற்றம் செய்து தேசியமயமாக்கம் செய்யப்பட்டது.

இப்படி தான் ஏர் இந்தியா பிறந்தது, இப்படி 69 ஆண்டுகளுக்கு பின்பு பெரிய அளவில் விரிவாக்கம் அடைந்த ஏர் இந்தியா பெரிய நஷ்டம், வர்த்தக இழப்புடன் டாடா குழுமத்தின் கைகளுக்கு வந்தது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications