கொரோனா வைரஸ், இதுவரை மனித இனத்தை அதிகம் சோதிக்க முடியாத அளவுக்கு, நம்மை சோதித்துக் கொண்டு இருக்கிறது.
உலக வர்த்தகம் தொடங்கி உள்ளூர் தள்ளு வண்டி வியாபாரம் வரை ஒருத்தரையும் விட்டு வைக்க வில்லை.
இந்த கொரோனா போருக்கு ஏற்கனவே பல கோடீஸ்வரர்கள் மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகள், தங்களால் முடிந்ததை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
டாடா
இன்று (மார்ச் 28, 2020, சனிக்கிழமை) சில மணி நேரங்களுக்கு முன்பு தான் டாடா ட்ரஸ்ட் (Tata Trust) அமைப்பு சுமார் 500 கோடி ரூபாயை, இந்த கொரோனா போருக்கு செலவழிக்க இருப்பதாகச் சொல்லி, எல்லோரையும் நெகிழச் செய்தது. சமூக வலைதளங்கள் எல்லாம் இதுவரை அந்த 500 கோடி ரூபாய் தானம் கொடுத்ததையே இன்னும் ஜீரணித்து முடிக்கவில்லை.
1000 கோடி
அந்த மனித நேயத்தை பாராட்டி முடிப்பதற்குள், இப்போது டாடா சன்ஸ் (Tata Sons) நிறுவனம் மேலும் 1,000 கோடி ரூபாயை, கொரோனா வைரஸுக்கு எதிரான போருக்கு செலவழிக்க இருப்பதாகச் சொல்லி நெஞ்சில் நீங்கா இடம் பிடித்து இருக்கிறது. ஆக மொத்தம் 500 + 1,000 = 1,500 கோடி ரூபாய் கொடுத்து இருக்கிறது டாடா ட்ரஸ்ட் மற்றும் டாடா சன்ஸ்.
டாடா சன்ஸ்
டாடா சன்ஸ் நிறுவனமும் டாடா ட்ரஸ்ட் அமைப்பு உடன் இணைந்து தேவையான மருத்துவ வெண்டிலேட்டர்களைக் வர வழைக்க இருக்கிறார்களாம். அதோடு டாடா சன்ஸ் நிறுவனம், கூடிய விரைவில், இந்தியாவில் இருக்கும் தன் உற்பத்தி ஆலைகளைப் பயன்படுத்தி மருத்துவ வெண்டிலேட்டர்களைத் தயாரிக்க இருக்கிறார்களாம்.
டாடா நிறுவனம்
"தற்போது இந்தியா மற்றும் உலகின் அனைத்து பகுதிகளில் கொரோனா வைரஸால் ஏற்பட்டு இருக்கும் பாதிப்பு கவலை அளிக்கிறது. இந்த நேரத்தில் நம் மிகச் சிறந்த செயல்பாடுகள் தேவை" எனச் சொல்லி இருக்கிறது டாடா நிறுவனம். 1,500 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்த டாடாவின் அந்த மனசு இருக்கே அது தான் சார் தெய்வம். இந்தியாவின் கொரோனா போராட்டத்துக்காக ரூ. 1,500 கோடி கொடுத்த டாடாவுக்கு ஒரு ராயல் சல்யூட்.


Click it and Unblock the Notifications