புவனேஸ்வர், ஒடிசா: உலகம் முழுவதுமே புவி வெப்பமயமாதலை தடுப்பதற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரித்து பயன்படுத்துவதை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தியாவிலும் மக்கள் தங்கள் வீட்டு மேல் கூரைகளில் சூரிய ஒளி மின்சக்தி தகடுகளை அமைத்து அதன் மூலம் மின்சாரம் தயாரித்து பயன்படுத்துவதை ஊக்குவித்து வருகிறது.
இந்தியாவில் தற்போது சோலார் துறை சார்ந்து இயங்க கூடிய நிறுவனங்கள் இதன் காரணமாக வேகமான வளர்ச்சி அடைந்த வருகின்றன . இந்தியாவில் மிகப்பெரிய தொழில் குழுமமாக இருக்கும் டாடா குழுமம் தங்களுடைய டாடா பவர் ரினிவபில் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் மூலம் புதிதாக ஒரு சோலார் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் டாடா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த திட்டத்தின் மூலம் மக்கள் தங்கள் வீட்டின் மேல் கூரைகளில் 2499 ரூபாய்க்கு சோலார் பேனல்களை அமைத்து மின்சாரம் தயாரித்து பயன்படுத்திக்கொள்ள முடியும் .

ஒடிசாவின் புவனேஸ்வர் மாநிலத்தில் வீடு தோறும் சோலார் என்ற திட்டத்தை டாடா நிறுவனம் தொடங்கி இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக தான் 2499 ரூபாய்க்கு ஒரு கிலோ வாட் செட்டப் கொண்ட சூரிய ஒளி மின் சக்தி அமைப்புகளை நிறுவும் திட்டத்தை தொடங்கியிருக்கிறது. இதுவே இரண்டு கிலோவாட் திறன் கொண்ட சோலார் பேனல்களுக்கு 4999 ரூபாயும் மூன்று கிலோவாட் கொண்ட சோலார் பேனல் அமைப்புகளுக்கு 7999 ரூபாயும் செலுத்த வேண்டும் என தெரிவித்திருக்கிறது.
அதாவது மக்கள் இந்த தொகையை மட்டுமே செலுத்திவிட்டு மத்திய மாநில அரசுகளின் மானியமாக 1 கிலோவாட் அமைப்புக்கு 55,000 ரூபாய் பெறலாம். மீதமுள்ள தொகையை மாதாந்திர தவணையாக செலுத்தலாம் என டாடா அறிவித்துள்ளது. இந்தியாவிலேயே குறைந்தபட்சமாக 2500 ரூபாய்க்குள் வீட்டின் மேல் கூரையில் சோலார் பேனல்களை அமைக்கும் திட்டத்தை முதன்முறையாக டாடா நிறுவனம் தான் கொண்டு வந்திருக்கிறது. பிரத்தியேகமாக வீடுகளுக்கு என இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மிடில் கிளாஸ் மக்கள் தங்கள் வீட்டு மேல் கூரைகளில் சூரிய ஒளி மின்சக்தி பேனல்கள் அமைத்து அதிலிருந்து மின்சாரம் தயாரித்து பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாக டாடா நிறுவனம் பெருமிதம் தெரிவித்துள்ளது . மக்கள் மொத்த தொகையில் மூன்றில் ஒரு பங்கினை செலுத்தி விட்டு மீதமுள்ள தொகையை மாதாந்திர தவணையாக செலுத்தலாம் எனவும் அறிவித்துள்ளது.
ஒடிசா மாநில அரசோடு இணைந்து இந்த திட்டத்தை டாடா நிறுவனம் செயல்படுத்துகிறது. அண்மையில் கூட மத்திய அரசு பிரதமர் சூர்ய கர் என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. ஒடிசா மாநில அரசினை பொறுத்தவரை மக்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டுக்கு மாற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. அதற்காகவே டாடா உடன் இணைந்து இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications