அதானி, ரிலையன்ஸ் குழுமத்தை போலவே வர்த்தகத்தை வேகமாக விரிவாக்கம் செய்வதில் அதிகப்படியான கவனத்தை செலுத்தி வரும் டாடா குழுமம், இந்தியாவின் மிகப்பெரிய பாட்டில் குடிநீர் நிறுவனமாக விளங்கும் பிஸ்லரி இண்டர்நேஷ்னல்-ன் பெரும் பகுதி பங்குகளை கைப்பற்ற பல வாரங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், டாடா குழுமத்திற்கு தற்போது பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
பிஸ்லரி இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்த நிலையில், இந்நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை விற்பனை செய்வதாக இதன் தலைவர் ரமேஷ் சவுகான் தெரிவித்தார். இதை தொடர்ந்து தான் டாடா மற்றும் பிஸ்லரி நிர்வாகம் பங்கு விற்பனை குறித்த பேச்சுவார்த்தையை துவங்கியது.
சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டு திட்டம் தற்போது தேக்கம் அடைந்துள்ளது. இதற்கு என்ன காரணம்..? சில நாட்களுக்கு முன்பு பிஸ்லரி நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் ஒரு பெரும் வர்த்தக குழுமத்துடன் புதிய தொழிற்சாலை அமைப்பது குறித்து ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.
மதிப்பீடு
எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் முதலீடு செய்யும் அதன் மதிப்பை ஆய்வு செய்வது வழக்கம். அதுவே ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதன் பங்கு மதிப்பை வைத்தோ அல்லது சொத்துக்களின் மதிப்பை வைத்தோ கணக்கிட்டு அதன் பின்பு முதலீடு செய்யப்படும். இந்த வகையில் டாடா குழுமம், பிஸ்லரி இண்டர்நேஷ்னல் நிறுவனத்தில் முதலீடு செய்யும் போது அதன் மதிப்பீட்டை கணித்த போது அதிகப்படியாக மதிப்பிட்டு உள்ளது.
பிஸ்லரி இண்டர்நேஷ்னல் - டாடா
பிஸ்லரி இண்டர்நேஷ்னல் தனது நிறுவனத்தின் மதிப்பை மிகைப்படுத்தி கணக்கிட்டு உள்ளதால், இந்த விலையில் முதலீடு செய்ய முடியாது என்பதால் டாடா குழுமத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
முரண்பாடு
டாடா குழுமம் பிஸ்லரி நிறுவனத்தில் சுமார் 1 பில்லியன் டாலர் அளவில் முதலீடு செய்து அதிகப்படியான பங்குகளை வாங்க திட்டமிட்டு இருந்தது, தற்போது மதிப்பீடு பிரச்சனை காரணமாக டாடா குழுமத்தின் கனவு திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. இது மட்டும் அல்லாமல் முன்பு ஒப்புக்கொண்ட மதிப்பீட்டுக்கு பங்குகளை விற்பனை செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
1 பில்லியன் டாலர் முதலீட்டு திட்டம்
இந்த 1 பில்லியன் டாலர் முதலீட்டு திட்டத்தில் இரு நிறுவனங்களும் அதிகப்படியான ஆர்வத்துடன் இருந்த நிலையில், வேகமாக முக்கிய பேச்சுவார்த்தை கட்டத்தை அடைந்தது. 1949 முதல் இந்தியாவில் செயல்பட்டு வரும் பிஸ்லரி, வெளிநாட்டு வர்த்தக விரிவாக்க முயற்சியில் தோல்வி அடைந்தது.
150 தொழிற்சாலை
இந்தியாவில், பிஸ்லேரி இன்டர்நேஷனல் 150க்கும் மேற்பட்ட உற்பத்தி ஆலைகளையும், 7,500 டிரக்குகளுடன் 6,000க்கும் அதிகமான விநியோகஸ்தர்களின் வலையமைப்பையும் கொண்டுள்ளது.
பிற வர்த்தகம்
மினரல் வாட்டர் பிராண்டான பிஸ்லரி குடிநீர் மட்டும் அல்லாமல் கூடுதலாக இந்நிறுவனம் பிரீமியம் ஸ்பிரிங் வாட்டர் பிராண்டான வேடிகாவை விற்பனை செய்கிறது. அதன் போர்ட்ஃபோலியோவில் கார்பன் ஏற்றப்பட்ட பானங்கள் லிமோனாட்டா மற்றும் ஸ்பைசி, சோடா மற்றும் பழ பானங்கள் ஆகியவை அடங்கும்.
போட்டி
இந்தியாவில் Coca-Cola-வின் Kinley மற்றும் PepsiCo's Aquafina உடன் போட்டியிடும் பிஸ்லரி நிறுவனம் ஆன்லைன் ஆப்லைன் வர்த்தகத்திலும் விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் பாட்டில்-குடிநீர் சந்தையில் பிஸ்லரியின் பங்கு சுமார் 32 சதவீத சந்தையைக் கொண்டு உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications