டாடா குழுமத்தின் நிதிச் சேவைப் பிரிவான டாடா கேபிடல், 2025 ஆம் ஆண்டில் ஐபிஓ வெளியிடுவதற்கு முன்பு அதன் துணை நிறுவனங்களை ஒருங்கிணைக்கத் தீவிரமாக மதிப்பீடு செய்து வருகிறது.
இந்திய ரிசர்வ் வங்கியின் SBR விதிமுறைகளின் ஒரு பகுதியாக, அதன் துணை நிறுவனமான Tata Capital Financial Services க்கான திருத்தப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்புகளைப் பூர்த்தி செய்வதற்கான பணிகளைத் துவங்கியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி செப்டம்பர் 2022 இல், டாடா கேபிடல் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தை SBR-ன் மேல் அடுக்கில் உள்ள வங்கி அல்லாத கடன் வழங்குபவர்களின் பட்டியலில் சேர்த்தது.
டாடா குழுமம்
டாடா குழுமத்தில் டாடா கேப்பிடல் பைனான்சியல் சர்வீசஸ், டாடா கேப்பிடல் ஹவுசிங் பைனான்ஸ், டாடா கிளீன்டெக் கேப்பிடல் ஆகிய 3 கடன் சேவை அளிக்கும் நிறுவனங்களும், 3 முதலீட்டு ஆலோசனை வர்த்தகப் பிரிவான டாடா செக்யூரிட்டீஸ், டாடா கேப்பிடல் சிங்கப்பூர் மற்றும் ஒரு தனியார் ஈக்வட்டி நிறுவனம் உள்ளது.
டாடா கேப்பிடல்
இந்த 6 நிறுவனத்திற்கும் ஹோல்டிங் நிறுவனம் டாடா கேப்பிடல் தான். இதில் டாடா கேப்பிடல் பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் ரிசர்வ் வங்கியில் டெப்பாசிட் பெறாத NBFC நிறுவனமாகப் பதிவிட்டு உள்ளது. இந்த நிறுவனத்தை ஐபிஓ வெளியிட வேண்டுமெனில் உரிய விதிமுறையைப் பின்பற்ற வேண்டும்.
மொத்த கணக்குப் புத்தகம்
டாடா கேப்பிடல் மொத்த கணக்கு புத்தகத்தின் மதிப்பு மார்ச் 31, 2022 உடன் 94,349 கோடி ரூபாய், கடந்த ஆண்டு வெறும் 77220 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது பெரிய அளவில் உயர்ந்துள்ளது. 2022 ஆம் நிதியாண்டில் டாடா கேப்பிடல் 10,253 கோடி ரூபாய் வருமானத்தைப் பெற்று இருந்தது. இதேபோல் வரிக்கு பிந்தைய லாப அளவில் 46 சதவீதம் அதிகரித்து 1,648 கோடி ரூபாயாக உள்ளது.
ஆர்பிஐ விதிமுறைகள்
இந்த நிலையில் டாடா கேபிடல் ஃபைனான்சியல் சர்வீசஸ் இப்போது ஆர்பிஐ-யின் மேம்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை கட்டமைப்பை ஏற்றுக்கொள்வதற்கு நிர்வாகக் குழுவை அமைத்து அதன் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் ரிசர்வ் வங்கியின் 'மேல் அடுக்கில் இருக்கும் வங்கி அல்லாத வங்கிக் கடன் வழங்குபவராக மூன்று ஆண்டுகளுக்குள் கட்டாயமாகப் பங்குச்சந்தையில் பட்டியலிட வேண்டும்.
நிர்வாகக் குழு முடிவு
டாடா கேபிடல் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் தனித்தனியாகப் பட்டியலிடப்படுமா அல்லது ஹோல்டிங் நிறுவனத்தின் கீழ் இணைக்கப்படுமா என்பது குறித்து நிர்வாகம் முடிவு எடுக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications