டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் கெமிக்கல் துறையில் செயல்பட்டு வரும் ஒரு மிட் கேப் நிறுவனமாகும்.
கடந்த அக்டோபர் 30, 2020வுடன் முடிவடைந்த காலாண்டில் ஒருங்கிணைந்த விற்பனை 2609.35 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய காலாண்டில் விற்பனை 2348.16 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
எனினும் கடந்த ஆண்டில் இதே காலாண்டில் விற்பனை 3,083.50 கோடி ரூபாயாகவும் இருந்தது. இதற்கிடையில் இன்று இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது புதிய 52 வார புதிய உச்சத்தினை தொட்டுள்ளது. இன்று அதன் பங்கு விலையானது 4.19% ஏற்றம் கண்டு, 367.90 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இதன் முந்தைய நாள் முடிவு விலையானது 353.10 ரூபாயாகும்.
மூவிங்க் ஆவரேஜ்ஜிக்கு மேல்
டாடா கெமிக்கல்ஸ் பங்கு விலையானது கடந்த மூன்று வர்த்தக அமர்வில் 10.33 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. இதற்கிடையில் டாடா கெமிக்கல்ஸின் பங்கு விலையானது 5 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள், 200 நாள் மூவிங் ஆவரேஜிக்கு மேலாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
இவ்வளவு ஏற்றமா?
இதே இப்பங்கின் விலையானது ஒரு வருடத்தில் 26.11% ஏற்றத்திலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 22.51% ஏற்றத்திலும் காணப்படுகிறது. இதே கடந்த ஒரு மாதத்தில் 10.71% ஏற்றத்திலும் காணப்படுகிறது. இதே மொத்தம் 4.01 லட்சம்பங்குகள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் 14.34 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதே இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 9,071 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
செம ஏற்றத்தில் டாடா கெமிக்கல்ஸ்
ஆரம்பத்தில் 4 சதவீதத்திற்கும் மேலாக ஏற்றம் கண்ட இந்த நிறுவன பங்கின் விலையானது, முடிவில் 0.85% ஏற்றம் கண்டு 356.10 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் 52 வார உச்ச விலையினை இன்று தொட்டுள்ள நிலையில், கடந்த மார்ச் 23 அன்று 52 வார குறைந்தபட்ச விலையான 197.40 ரூபாயினை தொட்டது. அதெல்லாம் சரி 9 மாதத்திற்கு இப்படி ஒரு மாற்றமா? எப்படி?
பங்கினை அதிகரித்த எல்ஐசி
இந்த நிறுவனத்தில் பொதுத் துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி 5.03 சதவீத பங்கினை முன்னர் வைத்திருந்த நிலையில், தற்போது டாடா கெமிக்கல்ஸில் 7.09 சதவீதமாக அதிகரித்துள்ளதையடுத்து டாடா கெமிக்கல்ஸின் பங்கு விலையானது ஏற்றம் கண்டுள்ளது.
எல்ஐசி, டாடா கெமிக்கல்ஸில் 52.39 லட்சம் பங்குகளை ஜனவரி 8,2019 முதல் நவம்பர் 17, 2020 வரையிலான காலகட்டத்தில் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications