இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), இந்த ஆண்டுக்கான சம்பள உயர்வை ஏப்ரல் மாதத்தில் வழங்குவதை நிறுத்த உள்ளதாக அறிவித்த நிலையில் ஐடி ஊழியர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது முக்கியமான மற்றொரு தகவல் வழங்கியுள்ளது.
டிசிஎஸ் நிறுவனம் 2024-2025 நிதியாண்டில் மட்டும் 1.10 லட்சம் ஊழியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கியதாக அறிவித்துள்ளது. டிசிஎஸ் நிறுவனம் வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படும் வருடாந்திர சம்பள உயர்வை ஒத்திவைக்கப்பட்ட நிலையிலும் அதிகப்படியான ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு முக்கியமான காரணமும் உண்டு.

இந்த தகவலை டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் மற்றும் மனிதவளத் துறைத் தலைவர் மிலிந்த் லக்காட் மற்றும் நிதித் துறைத் தலைவர் சமீர் சேக்சாரியா ஆகியோர் கடந்த வாரம் வெளியிட்ட காலாண்டு முடிவுகளின் போது தெரிவித்தனர்.
டிசிஎஸ் நிர்வாகம் தனது திறமையான ஊழியர்களைத் தொடர்ந்து நிறுவனத்தில் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாகவும், ஊழியர்களின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்காகவும் இந்த பதவி உயர்வுகள் திட்டமிட்டு ஒவ்வொரு காலாண்டு அடிப்படையில் ஊழியர்களுக்குப் பதவி உயர்வு அளிக்கப்படுவதாகவும் மிலிந்த் லக்காட் விளக்கினார்.
இதேபோல் டிசிஎஸ் நிறுவனம் 2025 நிதியாண்டில் 13 சதவீதம் என்ற அதிகப்படியான அட்ரிஷன் விகிதத்தைக் கொண்டுள்ளது. 1.1 லட்சம் பேருக்கு பதவி உயர்வு வழங்கியும் அட்ரிஷன் விகிதத்தை எதிர்கொண்டு இருப்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது.
மேலும் 2025-26ஆம் நிதியாண்டில் டிசிஎஸ் நிர்வாகம் 42,000 பிரஷ்ஷர் ஊழியர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது. இதில் அதிகப்படியான ஊழியர்களை டிசிஎஸ் நிர்வாகம், தேசிய தகுதித் தேர்வை (NQT) முறையில் எடுக்க உள்ளது. இந்த தேர்வு நாடு முழுவதும் உள்ள மாணவர்களை பணியில் சேர்க்க டிசிஎஸ் செயல்படுத்தும் ஒரு தேர்வு முறை.
இந்த தேர்வில் ஊழியர்களின் திறனைச் சோதனை செய்து அதன் அடிப்படையில், புதிய ஊழியர்களை பிரைம், டிஜிட்டல் அல்லது நிஞ்ஜா பிரிவுகளில் வகைப்படுத்தி பணியில் சேர்க்கும். இந்த 3 பிரிவுகளுக்கும் சம்பளம், தொழில்நுட்பம் ஆகியவை மாறுபடும். தற்போது டிசிஎஸ் டிஜிட்டல் பிரிவில் தான் அதிகப்படியான ஊழியர்களைச் சேர்த்து வருகிறது.
டிஜிட்டல் ஆட்சேர்ப்பு மற்றும் உள் தொழில் முன்னேற்றத்தில் தொடர்ந்து முதலீடு செய்தது. திறமையான ஊழியர்களை நிர்வகிப்பதில் ஒரு சீரான அணுகுமுறையைக் கடைப்பிடித்தது. இந்த நடவடிக்கை, டிசிஎஸ் நிறுவனத்தின் ஊழியர் மேம்பாடு மற்றும் திறமை நிர்வாகத்தில் உள்ள அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications