இந்தியாவின் பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம் அன்றாடம் செய்திகளில் வரக்கூடிய ஒரு நிறுவனமாக மாறிவிட்டது. டிசிஎஸ் நிறுவனம் 2 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக வெளியிட்ட ஒரு அறிவிப்பு தான் இதற்கு முக்கிய காரணம்.
டிசிஎஸ்-இல் ஊழியர்கள் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டையும் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக நாம் காண முடிகிறது. இந்த சூழலில் டிசிஎஸ் நிறுவனம் திடீரென தங்களுடைய போபால் அலுவலகத்தை மூடுவது பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறி இருக்கிறது .

போபாலில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் 1000க்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வரும் நிலையில் திடீரென அந்த அலுவலகத்தை மூடுவதாக டிசிஎஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது . இதன் மூலம் அங்கே வேலை செய்யக்கூடிய 1000க்கும் அதிகமான ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என சொல்லப்படுகிறது. சிலர் வேறு அலுவலகங்களுக்கு ட்ரான்ஸ்பர் செய்யப்பட்டு இருப்பதாகவும் சிலர் வேலை வாய்ப்பு இழந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிசிஎஸ் நிறுவனத்தின் போபால் அலுவலகம் மூடப்படுவது தொடர்பாக டிசிஎஸ்-இல் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் மத்திய பிரதேச மாநில நிதி அமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை சந்தித்து மனு அளித்திருக்கிறார்களாம். இதனால் தங்களின் வேலைவாய்ப்பு பறி போவதாகவும் அரசு டிசிஎஸ் நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தவும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
இதனை அடுத்து மத்திய பிரதேச மாநில அரசு டிசிஎஸ் தலைமை செயல் அதிகாரிக்கு இந்த அலுவலகத்தை மூடும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யும்படி கடிதம் எழுதி இருக்கிறது. டிசிஎஸ் நிறுவனம் ஏற்கனவே அகமதாபாத் ,பாட்னா,லக்னோ, புவனேஸ்வர் , கொச்சி போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் தன்னுடைய அலுவலகங்களை நடத்தி வரக்கூடிய நிலையில் போபால் அலுவலகத்தையும் தொடர்ந்து நடத்த வேண்டும் என அதில் கேட்டுக் கொண்டிருப்பதாக தெரிகிறது .
இந்த அலுவலகத்தை மூடுவது மத்திய பிரதேச அரசுக்கும் பொருளாதார ரீதியாக இழப்பினை ஏற்படுத்தும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கக்கூடிய தங்களுடைய அலுவலகங்கள் வாயிலாக 500 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்கிறது டிசிஎஸ். தற்போது திடீரென இந்த அலுவலகம் மூடப்படுவதாக அறிவித்திருப்பது இந்த வேலை செய்யக்கூடிய ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பை இழக்க செய்திருக்கிறது. இரண்டாம் நிலை நகரங்களில் ஐடி அலுவலகங்கள் நீடிக்க முடியாத என்ற ஒரு கேள்வியையும் வலுவாக எழு செய்திருக்கிறது.
இதற்கிடையே டிசிஎஸ் தரப்பில் போபால் அலுவலகம் தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஆனால் ஜூன் மாதம் முதலே இங்கே வேலைகளை நிறுத்தி விட்டு இங்கிருக்கும் பொருட்களை இடமாற்றம் செய்து வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications