சென்னை: சமூக ஊடகங்களில் பல்வேறு வேலைவாய்ப்புகளை வழங்கும் போர்ட்டல்கள் மற்றும் ஆப்கள் உள்ளன. இதில் லிங்க்ட்இன் போர்ட்டலும் அடங்கும். உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் லிங்க்ட்இன் போர்ட்டல், டாப் 25 நிறுவனங்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலை LinkedIn Top Companies in India 2024 என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. அதில் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் முதலிடத்தில் உள்ளது. மேலும், "எங்களது எட்டாவது வருடாந்திர டாப் 25 நிறுவனங்களின் பட்டியலை உலக அளவில் 5000 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களை, உங்களது தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் வெளியிடுகிறோம்" என தனது பிளாக் போஸ்டில் லிங்க்ட்இன் தெரிவித்துள்ளது.
லிங்க்ட்இன் 2024 இன் இந்தியாவின் சிறந்த நிறுவனங்களின் பட்டியல்: இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ், 2024 ஆம் ஆண்டில் இந்தியாவின் லிங்க்ட்இன் டாப் நிறுவனங்களில் முதலிடத்தைப் பிடித்தது, மற்ற ஐடி நிறுவனங்களான ஆக்சென்ச்சர் மற்றும் காக்னிசென்ட் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடிக்கின்றன. முதல் 25 நிறுவனங்களில், ஒன்பது நிதிச் சேவை நிறுவனங்கள் உள்ளன. இதில் மேக்வாரி குரூப் (4வது இடம்), மோர்கன் ஸ்டான்லி (5 வது இடம்), மற்றும் ஜேபி மோர்கன் சேஸ் அண்ட் கோ (6 வது இடம்) ஆகியவை அடங்கும்.

இதைத் தொடர்ந்து HCL எண்டர்பிரைஸ் (12 வது இடம்), அமேசான் (15 வது இடம் ) மற்றும் மாஸ்டர்கார்டு (17 வது இடம்) உள்ளிட்ட தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் உள்ளன. பிரிஸ்டல் மியர்ஸ் ஸ்குயிப் (8 வது இடம்), நோவோ நோர்டிஸ்க் (24 வது இடம்) மற்றும் வியாட்ரிஸ் (25 வது இடம்) ஆகிய நிறுவனங்களும், இந்த லிஸ்டில் உள்ளனர். பட்டியலின் படி, லென்ட்ரா, மேக்மைட்ரிப் மற்றும் ரெடிங்டன் லிமிடெட் ஆகியவை இந்தியாவில் லிங்க்ட்இனின் முதல் 'சிறந்த நடுத்தர நிறுவனங்கள்' பட்டியலில் உள்ளன.
2024 இல் இந்தியாவின் சிறந்த நடுத்தர நிறுவனங்களின் பட்டியல்: இந்தியாவில் 250 - 500 பணியாளர்களைக் கொண்ட நடுத்தர நிறுவனங்களின் பட்டியலில், SaaS பிளாட்பாரம் லென்ட்ரா முதலிடத்தைப் பிடித்தது. மேக்மைட்ரிப் (2வது இடம்), பிரதான் (7வது), நைக்கா (9வது), மற்றும் ட்ரீம்11 உட்பட இந்தியாவில் உள்ள பல நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. பயணம், நிதிச் சேவைகள், விளையாட்டுகள் ஆகியவற்றில் சிறந்த பல நிறுவனங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்தியாவில் வேலை தேடுபவர்களுக்கு பல்வேறு தொழில்களில் கிடைக்கும் வாய்ப்புகளை, இந்தப் பட்டியல் எடுத்துக்காட்டுகிறது.
லிங்க்ட்இன் அதன் தளத்திலிருந்து சில விவரங்களைப் பயன்படுத்தி இந்தப் பட்டியலை உருவாக்கி இருக்கிறது. வேலை தேடும் நபர்கள், தங்கள் வேலையில் முன்னேற உதவும் எட்டு காரணிகளின் அடிப்படையில், இந்த நிறுவனங்களை வரிசைப்படுத்தி உள்ளனர். இந்த காரணிகளில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள், நிறுவனத்தின் தன்மை, நிறுவனத்தில் எவ்வளவு ஊழியர்கள் விரும்பி வேலை செய்கின்றனர், பன்முகத்தன்மை, கல்வி மற்றும் நாட்டில் எத்தனை ஊழியர்கள் வேலை செய்கிறார்கள் போன்ற விஷயங்கள் இதில் அடங்கும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications