இந்திய வர்த்தகச் சந்தையில் பெரிய நிறுவனங்கள் மத்தியிலான போட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சிறிய நிறுவனங்களுக்கு மட்டும் அல்லாமல் பிற துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்களுக்கும் பல பிரச்சனை உருவாகி வருகிறது.
உதாரணமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் எண்ணெய், எரிவாயு, ரீடைல், டெலிகாம் துறையில் மட்டுமே இருந்து வந்த நிலையில் தற்போது FMCG நிறுவனங்களைக் கைப்பற்றி இப்பிரிவு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு வருகிறது. இதனால் இப்பிரிவில் இருக்கும் நிறுவனங்களுக்குப் பெரும் தொல்லையாக மாறி வருகிறது.
இதேபோல் அதானி குழுமம் சமீபத்தில் அரிசி பிராண்டான கோஹினூர் பிராண்டை வாங்கியது மறக்க முடியாது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதானி குரூப் வரிசையில் தற்போது டாடா களத்தில் இறங்கியுள்ளது.
டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ்
டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் நிறுவனம் ஏற்கனவே பல நுகர்வோர் பொருட்களைத் தயாரித்தும் விற்பனை செய்தும் வரும் நிலையில் புதிதாக ஹெல்த் சப்ளிமென்ட் துறையில் இறங்கியுள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள வேளையில் ரீடைல் FMCG வர்த்தகம் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
FMCG துறை
இந்த நிலையில் ரீடைல் சந்தையில் தனது முக்கிய வர்த்தகத் தளங்கள் மூலம் அதிகப்படியான வாடிக்கையாளர்களை நேரடியாகப் பெற்றுள்ள நிலையில் டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் நிறுவனம் FMCG துறையில் நேரடியாக இறங்க முடிவை எடுத்துள்ளது.
TATA GoFit பிராண்ட்
இந்நிலையில் டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் நிறுவனம் ஹெல்த் சப்ளிமென்ட் பிரிவில் தாவர அடிப்படையிலான ப்ரோடீன் பவுடர்-ஐ அறிமுகம் செய்துள்ளது. TATA GoFit என்ற பிராண்டின் கீழ் பெண்களுக்கான ஹெல்த் சப்ளிமென்ட் பொருட்களை அறிமுகம் செய்துள்ளது.
பிட்னஸ்
இந்தியாவில் தற்போது இளம் தலைமுறையினர் முதல் பெரியவர்கள் வரையில் பிட்னஸ் மீதும், உடல் ஆரோக்கியத்தின் மீதும் அதிகப்படியான அக்கறை கொண்டு இருக்கும் வேளையில் TATA GoFit பிராண்ட் பொருட்கள் குடல்-க்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாத புரோபயாடிக் சப்ளிமென்ட் ஆக உள்ளது என டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் நிறுவனத்தின் பேகேஜ் புட்ஸ் பிரிவின் தலைவர் தீபிகா பான் தெரிவித்துள்ளார்.
டாடா NEU - சூப்பர் ஆப்
சரி, சமீபத்தில் டாடா குழுமம் டிஜிட்டல் வர்த்தகத் துறையில் இறங்குவதற்காக டாடா NEU என்ற சூப்பர் ஆப் அறிமுகம் செய்தது நினைவிருக்கா..? இதை எத்தனை பேர் பயன்படுத்தி உள்ளீர்கள்..? பிடித்துள்ளதா..?


Click it and Unblock the Notifications