டாடா குழுமம் நுகர்வோர் துறையில் வேகமாக வளர்ச்சி அடைய வேண்டும் என்பது மட்டும் அல்லாமல் இந்தியாவின் மிகப்பெரிய ரீடைல் வர்த்தக சந்தையில் பெரும் பகுதியை கைப்பற்றியாக வேண்டும் என்ற முக்கிய இலக்கில் உள்ளது. இதன் வாயிலாக ஏற்கனவே மளிகை பொருட்கள், டீ, ரெடிமேட் உணவுகளை விற்று வருகிறது.
இப்பிரிவை விரிவாாக்கம் செய்ய வேண்டிய திட்டத்தில் தான் பிஸ்லரி, ஹால்திராம்ஸ் போன்ற நிறுவனங்களை கைப்பற்றவும், பெரும் பகுதி பங்குகளை கைப்பற்றவும் திட்டமிட்டது. இந்த நிலையில் பல மாதங்களாக டாடா குழுமம் கேப்பிடல் புட்ஸ் நிறுவனத்தை கைப்பற்ற வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பது மட்டும் அல்லாமல் பல நிறுவனங்கள் உடன் போட்டிப்போட்டு வருகிறது.

கேப்பிடல் புட்ஸ் நிறுவனம் தான் Ching's Secret மற்றும் Smith & Jones ஆகிய பிராண்டுகள் கீழ் பல பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தை கைப்பற்றும் போட்டியில் தற்போது டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் லிமிடெட் முன்னோடியாக உள்ளது.
டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் நிறுவனம் முதலில் கேப்பிடல் புட்ஸ் நிறுவனத்தின் 3 முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 65 - 70 சதவீத பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து அடுத்த சில வருடத்தில் மொத்த பங்குகளையும் வாங்க திட்டமிட்டு உள்ளது. தற்போது கேப்பிடல் புட்ஸ் நிறுவனம் சுமாப் 5500 கோடி ரூபாய்க்கு மதிப்பிடப்பட்டு உள்ளது.
கேப்பிடல் புட்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்க நெஸ்லே, Kraft Heinz போன்ற நிறுவனங்களும் போட்டிப்போட்டு வருகிறது. கேப்பிடல் புட்ஸ் கீழ் இருக்கும் Ching's Secret நூடில்ஸ், சூப், கர்ரி பேஸ்ட், ஃப்ரோசன் புட்ஸ் ஆகியவையும், Smith & Jones இஞ்சி பூண்டு விழுது, பல வகையான சாஸ் என பல பொருட்களை பல சுவைகளில் விற்பனை செய்து வருகிறது.
கேப்பிடல் புட்ஸ் நிறுவனத்தை கைப்பற்றும் போட்டியில் டாடா கன்ஸ்யூமர், நெஸ்லே, கிராப்ட் ஹெய்ன்ஸ் ஆகியவை மே மாதம் முதல் போட்டிப்போட்டு வருகிறது. இந்த போட்டியில் தற்போது டாடா குழுமம் முன்னோடியாக இருப்பது மட்டும் அல்லாமல் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சமீபத்தில் டாடா கன்ஸ்யூமர்ஸ் இந்தியாவின் பிரபல ஸ்னாக்ஸ் மற்றும் தின்பண்டங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹல்திராம் (Haldiram's) நிறுவனத்தில் 51 சதவீத பங்குகளை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியான நிலையில், இதை இரு நிறுவனங்களும் மறுத்த நிலையில், ஹல்திராம்ஸ் சுமார் 10 பில்லியன் டாலருக்கு தனது நிறுவனத்தை மதிப்பீட்டு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications