டாடா குழுமத்துக்கு சொந்தமான நிறுவனம் டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் லிமிடெட். இந்நிறுவனம் உணவு மற்றும் பானங்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் உலகின் முன்னணி பிராண்டட் டீ நிறுவனமாகும். தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் நிறுவனம் என்பதோடு, டாடா குழுமத்தை சேர்ந்த நிறுவனம் என்பதால் முதலீட்டாளர்கள் இந்நிறுவன பங்கின் ஒரு கண் வைத்து இருப்பார்கள்.
இந்த சூழலில், பங்கு தரகு நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ், டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனம் குறித்த தனது மதிப்பீட்டை வாங்கலாம் என்று உயர்த்தியுள்ளது. மேலும் பங்கின் இலக்கு விலையை ரூ.1,040லிருந்து ரூ.1,200ஆக உயர்த்தியுள்ளது.

டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவன பங்கின் ரேட்டிங்கை உயர்த்தியதற்கு வலுவான காரணத்தை கோல்ட்மேன் சாக்ஸ் வைத்துள்ளது. இது தொடர்பாக கோல்ட்மேன் சாக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், டீ விலை உயர்வுகள் மூலம் தேயிலை வணிகத்தில் லாப வரம்பில் மீட்சி காணும் என்பதால், 2025-27ம் நிதியாண்டுகளில் டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு வாயிலான வருமானம் வலுவான வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கிறோம்.
டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி வணிகங்களில் வலுவலான புதுமை மற்றும் விநியோகம் விரிவாக்கம், கையகப்படுத்துதல், கடன் திரும்ப செலுத்தப்படுவதால் நிகர வட்டி செலவில் ஏற்படும் குறைப்பும் ஒரு நேர்மறையானதாக கருதப்படுகிறது. சந்தையில் போட்டி தீவிரமாக இருப்பது ஒரு கவலையாக இருந்தாலும், மோசமான கால கட்டத்தை டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனம் கடந்து விட்டது என்று தெரிவித்துள்ளது.
கோல்ட்மேன் சாக்ஸ் ரேட்டிங்கை உயர்த்தியதையடுத்து, இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் பங்கின் விலை 8 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து ரூ.1,073.55 வரை சென்றது.
வர்த்தகத்தின் முடிவில், டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 7.12 சதவீதம் உயர்ந்து ரூ.1,062.55ல் முடிவுற்றது. கடந்த 2 ஆண்டுகளில் டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 41 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது. அதேசமயம் கடந்த 6 மாதங்களில் இந்நிறுவன பங்கின் விலை 17 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனம் கடந்த 2024-25ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (கடந்த டிசம்பர் காலாண்டு) நிகர லாபமாக ரூ.279 கோடி ஈட்டியுள்ளது. 2023 டிசம்பர் காலாண்டிலும் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.279 கோடிதான் ஈட்டியிருந்தது. கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.4,444 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2023 டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் 17 சதவீதம் அதிகமாகும்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!



Click it and Unblock the Notifications