இந்தியாவில் தற்போது இரு பெரும் வர்த்தகக் குழுமங்களான டாடா மற்றும் ரிலையன்ஸ் ஆன்லைன் ஆப்லைன் என அனைத்து ரீடைல் சந்தையிலும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று தங்களது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது மட்டும் அல்லாமல் தொடர்ந்து புதிய வர்த்தகத்திற்குள் நுழையத் திட்டமிட்டுள்ளது.
இதற்காக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ம் சரி, சந்திரசேகரன் தலைமையிலான டாடா சன்ஸ்-ம் சரி சக போட்டி நிறுவனங்களை வாங்கி வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது.
போட்டி நிறுவனங்களைக் கைப்பற்ற முடியாத பட்சத்தில் புதிதாக நிறுவனத்தை உருவாக்கும் பணியில் உள்ளது. இதன் படி தற்போது டாடா குழுமம் இந்தியாவில் வேகமாக வளரும் ஒரு துறை அதுவும் பெண்கள் அதிகம் விரும்பும் ஒரு துறையில் புதிதாக ஷாப்பிங் தளத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது.
டாடா டிஜிட்டல்
டாடா குழுமத்தின் அடுத்த 10 வருடத்தில் மிகப்பெரிய வர்த்தக நிறுவனமாக இருக்கும் என அனைவராலும் கணிக்கப்படும் டாடா டிஜிட்டல் நிறுவனம், பெண்களுக்கான பியூட்டி மற்றும் காஸ்மெட்டிக்ஸ் பொருட்களை விற்பனை செய்யும் புதிய ஈகாமர்ஸ் தளம் உருவாக்க முடிவு செய்துள்ளது.
பியூட்டி மற்றும் காஸ்மெட்டிக்ஸ்
இந்தியாவில் பியூட்டி மற்றும் காஸ்மெட்டிக்ஸ் பொருட்களை விற்பனை செய்ய ஏற்கனவே நைகா, பர்ப்புள், மைகிளாம் எனப் பல ஈகாமர்ஸ் தளம் இருக்கும் வேளையில், டாடா-வின் இந்த அறிவிப்பு இப்பிரிவு வர்த்தகத்தில் கடுமையான போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூப்பர் ஆப்
ஆன்லைன் பியூட்டி மற்றும் காஸ்மெட்டிக்ஸ் பொருட்களை விற்பனை சந்தையில் நைகா, பர்ப்புள், மைகிளாம் மட்டும் அல்லாமல் ஈகாமர்ஸ் நிறுவனங்களான அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களும் இருக்கும் வேளையில் டாடா மிகப்பெரிய இலக்குடன் தனது சூப்பர் ஆப் தளத்தை மேலும் வலிமைப்படுத்த இந்தத் தனித் தளத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது.
தனி நிறுவனம்
டாடா குழுமத்தில் இருக்கும் டாடா கிளிக், வெஸ்ட்சைட் நிறுவனங்கில் இருந்து தனியாகப் பிரித்துப் புதிய ஆன்லைன் ஸ்டோர்-ஐ உருவாக்க டாடா முடிவு செய்துள்ளது. மேலும் இதை டாடா டிஜிட்டல் பிரிவுக்குக் கீழ் கொண்டு வரவும் முடிவு செய்துள்ளது.
டாடா டிஜிட்டல்
டாடா டிஜிட்டல் என்பது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் வர்த்தகச் சந்தையில் நேரடியாக இறங்கி வர்த்தகத்தைப் பெறுவதற்காக ஆன்லைன் வர்த்தகத்திற்கெனப் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட பிரிவு. இந்தப் பிரிவில் டாடா குழுமத்தின் அனைத்து வர்த்தகத்தின் டிஜிட்டல் பிரிவுகளும் இதில் இருக்கும் என்பதால் அடுத்த நிர்வாகம் மற்றும் வளர்ச்சி அளவீடுகள் மிகவும் சிறப்பாக இருக்கும்.
டாடா கிளிக், வெஸ்ட்சைட் நிலை என்ன..?
இதன் காரணமாகத் தான் டாடா டிஜிட்டல் இப்புதிய ஆன்லைன் ஷாப்பிங் தளத்தைப் பிற நிறுவனங்களோடு இணைக்காமல் டாடா டிஜிட்டல் நேரடி கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் படி தனியாகப் பிரித்துள்ளார். இது தனியாக இருந்தாலும் டாடா கிளிக், வெஸ்ட்சைட் ஆகியவை இப்புதிய தளத்திற்குச் சப்ளையர் ஆக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
பர்சனல் கேர் மற்றும் பியூட்டி மார்கெட்
டாடா-வின் இந்த முடிவுக்கு மிக முக்கியக் காரணம் இந்தியாவின் ஆன்லைன் பர்சனல் கேர் மற்றும் பியூட்டி மார்கெட் 2025ஆம் ஆண்டுக்குள் 4.4 பில்லியன் டாலர் வரையில் அதிகரிக்கும் என்றும், இக்காலகட்டத்தில் இந்தியாவில் பியூட்டி மற்றும் காஸ்மெட்டிக்ஸ் பிரிவின் ஆன்லைன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 4 மடங்கு உயர்ந்து 110 மில்லியனாக அதிகரிக்கும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது. இவ்வளவு பெரிய வர்த்தக வாய்ப்பை யாரால் கைவிட முடியும்.
நைகா, பர்ப்புள், மைகிளாம்
இப்பிரிவு விற்பனையில் ஏற்கனவே முன்னோடியாக இருக்கும் நைாக 4 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் ஐபிஓ மூலம் பெரும் தொகையை முதலீடாகப் பெற உள்ளது. இதேபோல் பர்ப்புள, மைகிளம் ஆகியவை ஆன்லைன் வர்த்தகத்தைத் தாண்டி ஆப்லைன் சந்தைக்கும் தனது வர்த்தகத்தை மெல்ல மெல்ல விரிவாக்கம் செய்து வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications