இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகித்து வரும் டாடா குழுமத்தின் பயணம் ஓசூரில் டாடா எலக்ட்ரானிக்ஸ் முதல் முறையாகக் கட்டப்பட்ட ஐபோன் உதிரிப்பாகங்களுக்கான தொழிற்சாலை மூலம் துவங்கிக் கடந்த சில வருடத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்தியாவில் ஐபோன் தயாரிக்கும் பாக்ஸ்கான் உட்பட அனைத்து நிறுவனங்களும் உதிரிபாகங்களைச் சப்ளை செய்வதைத் தாண்டி ஐபோன் அசம்பிளியில் இறங்க வேண்டும் என்ற முக்கிய இலக்குடன் பெங்களூர் அருகில் அமைந்திருக்கும் சீனாவின் விஸ்திரான் தொழிற்சாலையும், அதன் மொத்த இந்திய வர்த்தகத்தைக் கைப்பற்ற முடிவு செய்தது டாடா குழுமம்.

இதற்காகப் பல மாத பேச்சுவார்த்தைக்குப் பின்பு முடிவு எடுக்கப்பட்ட நிலையில் புதன்கிழமை விஸ்திரான் நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தையும், இதன் கடன்களையும் சேர்த்து மொத்தமாக 750 மில்லியன் டாலருக்கு கைப்பற்றும் ஒப்பந்தத்தில் இரு தரப்பு கையெழுத்திட்டு உள்ளது.
ஐபோன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியில் இறங்க வேண்டும் என்ற டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் முயற்சியின் முக்கியக் கட்டமாக இந்தியாவில் முதல் முறையாக ஒரு இந்திய நிறுவனம் ஐபோன் அசம்பிளி செய்கிறது என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இதேவேளையில் சீனா-வின் பெரும் முதலீட்டில் பெங்களூரில் துவங்கப்பட்ட விஸ்திரான் தொழிற்சாலையில் சம்பளம் தொடர்பான பிரச்சனையில் ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு மத்தியில் வெடித்த பிரச்சனை கலவரமாக்க மாறியது மூலம் தொழிற்சாலை அடித்து நொறுக்கப்பட்டது.
இதன் மூலம் தொடர்ந்து பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில் இதனை விற்பனை செய்ய முடிவு செய்தது. டாடா குழுமம் மற்றும் விஸ்திரான் மத்தியிலான ஒப்பந்தத்தில் வெறும் 125 மில்லியன் டாலருக்கு மட்டுமே பங்குகள் பரிமாற்றத்திற்காக அளிக்கப்படுகிறது, 550 மில்லியன் டாலர் மதிப்பிலான கார்பரேட் கடனும், 80 மில்லியன் டாலர் மதிப்பிலான குறுகிய காலக் கடனும் விஸ்திரான் பெயரில் உள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் அனைத்து கடன்களையும் ஏற்றுக்கொள்கிறது டாடா குழுமம். டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கோலாரில் இருக்கும் விஸ்திரான் தொழிற்சாலையில் தற்போது கிட்டத்தட்ட 15000 ஊழியர்கள் பணியாற்றும் நிலையில் ஆப்பிள் ஐபோன் தயாரிப்புப் பணியில் முழுமையாக ஈடுபட்டு உள்ளது. இதை டாடா எலக்ட்ரானிக்ஸ் கைப்பற்றும் காரணத்தால் ஓசூர் தொழிற்சாலை உடன் இணைந்து செயல்பட உள்ளது.


Click it and Unblock the Notifications