டாடா எலக்ட்ரானிக்ஸ், தமிழ்நாட்டின் ஓசூர் தொழிற்சாலையில் ஆப்பிள் ஐபோன்களுக்கான கேசிங்களை உற்பத்தியை கணிசமாக அதிகரிக்க உள்ளது. தற்போதைய 50,000 கேசிங்களை உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் செப்டம்பர் மாதம் புதிய ஐபோன்களை அறிமுகத்திற்கு முன்பு இந்த விரிவாக்கம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இது மட்டும் அல்லாமல் இந்தியாவை ஐபோன் உற்பத்தியின் மையமாக மாற்றுவதாக ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் ஓசூர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து உற்பத்தியை தற்காலிகமாக பாதித்தது, இதனால் விரிவாக்க பணிகளையும் பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது டாடா எலக்ட்ரானிக்ஸ் மீண்டும் முழு வேகத்தில் தனது உற்பத்தி திறனை மேம்படத்துவதை தொடங்கியுள்ளது.
ஆப்பிள் சிஇஓ டிம் குக், அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்கள் இனி இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் என மே 1 தேதி இந்நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளை வெளியிடும் போது தெரிவித்தார். இந்தியாவில் ஆப்பிள் பொருட்களை தயாரிப்பது 2 பெரிய ஜாம்பவான்கள் தான், ஒன்று பாக்ஸ்தான், இரண்டாவது டாடா எலக்ட்ரானிக்ஸ்.
டாடா எலக்ட்ரானிக்ஸ் தனது பெரும்பகுதி உற்பத்தி தளத்தை தென்னிந்தியாவிலேயே வைத்துள்ளது, அதிலும் முக்கியமாக தமிழ்நாட்டில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் டாடா எலக்ட்ரானிக்ஸ், சென்னையில் இயங்கி வரும் பெகாட்ரான் டெக்னாலஜி இந்தியா நிறுவனத்தில் 60% பங்குகளை கைப்பற்றியது, இதற்கு முன்பு 2024 மார்ச்சில் பெங்களூருக்கு அருகில் இருக்கும் விஸ்ட்ரான் தொழிற்சாலையை வாங்கியது.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக், இந்தியாவை ஐபோன் உற்பத்தியின் முக்கிய மையமாக மாற்றுவதற்கான தனது திட்டத்தை மே 1 அன்று நடந்த முதல் காலாண்டு அறிக்கையின் வெளியிட்டின் போது தெரிவித்தார். அப்போது டிம் குக் "ஜூன் காலாண்டில், அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டவையாக இருக்கும்," என அவர் கூறினார். மேலும், ஐபேட், மேக், ஆப்பிள் வாட்ச் மற்றும் ஏர்பாட்ஸ் ஆகியவை வியட்நாமில் உற்பத்தி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்தியாவின் உற்பத்தி திறனை வலுப்படுத்துவது என்பது ஆப்பிளின் உலகளாவிய விநியோகச் சங்கிலியை பலப்படுத்தில் இனி வரும் காலத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் திறமையான பணியாளர்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவை ஆப்பிளின் முதலீட்டிற்கு உகந்த சூழலை வழங்குகின்றன.


Click it and Unblock the Notifications