இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றான டாடா குழுமம் 20க்கும் அதிகமான துறையில் இயங்கி வந்தாலும், என் சந்திரேசகரன் தலைமையிலான டாடா சன்ஸ் நிர்வாகத்தின் முக்கிய டார்கெட் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு தான்.
சீனாவில் இருந்து வெளியேறிய வர்த்தகம் இந்தியாவிற்கு வந்தாலும் பெரும்பாலான வர்த்தகம் தைவான், கொரியா நாட்டின் கிளை நிறுவனங்களுக்குத் தான் சென்றுள்ளது. இத்துறையில் அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்த டாடா குழுமம் 2 வருடங்களுக்கு முன்பே ஓசூரில் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்புக்கான அசம்பிளி தொழிற்சாலையை அமைத்தது.

இந்தத் தொழிற்சாலையில் அதிகளவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்புக் கொடுக்கப்பட்டாலும் பெரும்பகுதி வேலைவாய்ப்பு வெளி மாநிலத்தவர்களுக்கும் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் டாடா குழுமம் பல மாத பேச்சுவார்த்தைக்குப் பின்பு பெங்களூர் விஸ்திரான் தொழிற்சாலையைக் கைப்பற்றி ஆப்பிள் ஐபோன்களை மொத்தமாக உள்நாட்டில் தயாரிக்கும் கட்டமைப்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் டாடா குழுமம் பெங்களுர் விஸ்திரான் தொழிற்சாலை, சென்னை பாக்ஸ்கான் தொழிற்சாலை இதர பிற ஐபோன் சப்ளையர்களுக்குப் போதுமான ஐபோன் கேசிங்-ஐ சப்ளை செய்ய வேண்டும் எனில் அதன் அடிப்படை ஆதாரமான ஓசூர் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
இதனால் டாடா குழுமத்தின் கீழ் இருக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஓசூர் தொழிற்சாலையைத் தற்போது இருக்கும் தொழிற்சாலை அளவை சுமார் 2 மடங்கு விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
ஓசூர் தொழிற்சாலை தற்போது 5000 கோடி ரூபாய் முதலீட்டில், 500 ஏக்கரில், சுமார் 15000 பேர் பணியாற்றி வரும் வேளையில் அடுத்த 12- 18 மாதத்தில் விரிவாக்கம் செய்யப்படும் தொழிற்சாலையில் 28000 ஊழியர்கள் பணியாற்றுவார்கள் எனக் கணிக்கப்படுகிறது. இதேபோல் தொழிற்சாலை கட்டுமானமும் 1.5 முதல் 2 மடங்கு வரையில் விரிவாக்கம் செய்யத் திட்டமிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து டாடா குழுமம் எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும் டாடா குழுமத்தின் முக்கிய டார்கெட் என்றால் அது முழு ஐபோன்-ஐ சொந்தமாகத் தயாரிப்பது தான், விஸ்திரான் தொழிற்சாலையைக் கைப்பற்றியதன் மூலம் இது சாத்தியமாகியிருக்கும் பட்சத்தில் ஓசூர் தொழிற்சாலையை வலிமையாக்குவதன் மூலம் எளிதாகவும், வேகமாகவும் தனது இலக்கை அடைய முடியும்.
இந்த விரிவாக்கத்தின் மூலம் அதிகப்படியான மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது, குறிப்பாகப் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் வேளையில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் ஓசூரில் உருவாக உள்ளது. எனவே வேலைவாய்ப்பைத் தேடுவோருக்கு ஓசூர் முக்கியத் தளமாக மாறியுள்ளது, எல்லோரும் பெட்டி படுக்கையைக் கட்டி ரெடியா இருங்க.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications