இந்தியாவில் ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் தான் ஆப்பிள் நிறுவனத்திற்கான ஐபோன்களை உற்பத்தி செய்து தருகின்றன. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் விற்பனை இந்தியாவிலும் உலக அளவிலும் அதிகரித்துள்ளது. ஆப்பிள் நிறுவனமும் இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிப்பதாக கூறியுள்ளது.
இந்தியாவில் ஐபோன் உற்பத்தியில் ஃபாக்ஸ்கானுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் இருப்பது டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம். டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஓசூரில் தன்னுடைய ஐபோன் உற்பத்தி ஆலையை நிறுவி இருக்கிறது. இந்த ஆலையை மேற்கொண்டு விரிவாக்கம் செய்ய டாடா எலக்ட்ரானிக்ஸ் முடிவு செய்து இருக்கிறது. எக்கனாமிக்ஸ் டைம்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு நிகராக டாடா எலக்ட்ரானிக்ஸ் ஐபோன் உற்பத்தியில் ஈடுபட முடிவு செய்திருக்கிறது . இதற்கு ஏற்ற வகையில் ஓசூர் ஐபோன் ஆலையை விரிவாக்கம் செய்து ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் முடிவு செய்து இருக்கிறது. அந்த வகையில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஓசூரில் செயல்படக்கூடிய தங்களுடைய ஆலையை விரிவாக்கம் செய்து ஊழியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்து இருக்கிறது.
தற்போது 60 ஆயிரம் பேர் வேலை செய்யக்கூடிய இந்த ஆலையில் ஊழியர்கள் எண்ணிக்கையை 75,000 ஆக உயர்த்த முடிவு செய்து இருக்கிறதாம். இந்தியாவில் இருந்து ஆப்பிள் ஐபோன்கள் ஏற்றுமதி என்பது நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் 10 பில்லியன் மதிப்பு என்ற வரலாற்று சாதனை எட்டிவிட்டது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 75% அதிகமாகும்.
இந்த சூழலில் தான் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஆப்பிள் ஐபோன் உற்பத்தியை அதிகப்படுத்த உள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஃபாக்ஸ்கான் நிறுவன ஊழியர்களுக்கு நிகரான எண்ணிக்கையை கொண்டு டாடா எலக்ட்ரானிக்ஸ் ஐபோன் உற்பத்தியில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் டாடா குழுமத்தில் வேகமான வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு நிறுவனமாக இயங்கி வருகிறது. இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செமி கண்டக்டர் உற்பத்தி பிரிவில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வேகமான வளர்ச்சி அடைந்து வருகிறது. இது 66,000 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 3,752 கோடி ரூபாய் அதிகமாகும்.
டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலை விரிவாகம் ஒரு புறம் இருந்தால் திறன் மிகு ஊழியர்கள் கிடைப்பதில் சவால் இருப்பதாக மூத்த அதிகாரிகள் கூறுகின்றனர். சிஐஈஎல் ஹெச் ஆர் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தற்போதுள்ள நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப திறன் மிகு ஊழியர்கள் கிடைப்பதில்லை என்றும், படிப்பை முடித்து வர கூடிய நபர்களிடம் நேரடியாக வேலைக்கு தேவையான திறன்கள் குறைவாக இருப்பதாக கூறுகிறார்.


Click it and Unblock the Notifications