ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்தியாவில் நான்காவது ஐபோன் அசம்பிளி தொழிற்சாலையை, ஓசூரில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் அமைத்து வருகிறது. இந்த தொழிற்சாலையில் வரும் நவம்பர் மாதத்தில் உற்பத்தியைத் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் சீனாவை தூக்கி வீசிவிட்டு இந்தியாவுக்குத் தனது உற்பத்தி தளத்தை மாற்றும் முடிவில் இது மிகவும் முக்கியமானதாக உள்ளது
தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரமாக விளங்கும் ஓசூரில் சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலை டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு இரண்டாவது ஐபோன் அசம்பிளி தொழிற்சாலையாகும்.

2021 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முதல் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் வெறும் ஐபோன் உதிரிப்பாகங்களை மட்டுமே தயாரிக்கப்பட்டு உள்நாட்டு ஐபோன் உற்பத்தி தொழிற்சாலைக்கும், சீனாவுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது டாடா எலக்ட்ரானிக்ஸ் அடுத்தகட்டமாக ஐபோன் அசம்பிளி செய்யக் களமிறங்கியுள்ளது.
இந்த புதிய தொழிற்சாலையில் மொத்தம் 50,000 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானோர் பெண்களாக இருப்பார்கள் என்றும், பணியாளர் எண்ணிக்கையில் இது தமிழகத்தில் 2வது பெரிய ஊழியர் படை கொண்ட ஐபோன் தொழிற்சாலையாக இருக்கும், முதல் இடத்தில் சென்னையில் இருக்கும் பாக்ஸ்கான் நிறுவனம் உள்ளது.
இந்த புதிய அசம்பிளி தொழிற்சாலையில் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகப்படியான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் உபகரணங்கள் மற்றும் உற்பத்தி வரிசைகள் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் ஆப்பிள் நிறுவனம் தனது உற்பத்தி செயல்பாடுகளைச் சீனாவைத் தாண்டி இந்தியா, தாய்லாந்து, மலேசியா மற்றும் பிற நாடுகளில் விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதேவேளையில் ஐபோன் அசம்பிளி தொழிற்சாலையை எந்த நிலையிலும் தயாரிப்பும், தரமும் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக பலதரப்பட்ட பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது டாடா எலக்ட்ரானிக்ஸ். இதேவேளையில் பாக்ஸ்கான் சமீபத்தில் அதன் தொழிற்சாலை ஊழியர்களுக்காக மாபெரும் விடுதி வசதியைத் தமிழக அரசு கட்டிக்கொடுத்தது.
இதேபோன்ற வசதியை டாடா குழுமம் - தமிழக அரசு கூட்டு முயற்சியில் பெரும் தொழிலாளர் குடியிருப்பு திட்டத்தை ஓசூர் அருகே உள்ள நங்கமங்கலம் கிராமத்தில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களுக்காக டாடா குழுமம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (TIDCO) இணைந்து கட்ட உள்ளது. சுமார் ரூ.508 கோடி செலவில் அமைய உள்ள இந்த திட்டத்தில் 14 கட்டிடங்கள் அமைக்கப்பட்டு, 3000 பேருக்கு விடுதி வசதி அளிக்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications