சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா குழுமம், தனது எலக்ட்ரானிக்ஸ் உதிரிப்பாகங்கள் மற்றும் அசம்பிளி ஆலைகளுக்கு உத்தரகண்ட் மாநிலத்தில் இருந்து சுமார் 4,000 பெண் தொழிலாளர்களை பணியமர்த்த உள்ளது. இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை, தேசிய திறன் பயிற்சி திட்டம் (NATS) மற்றும் தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டம் (NAPS) ஆகியவற்றின் கீழ் மேற்கொள்ளப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது.
திங்கட்கிழமை டாடா குழுமம் உத்தரகண்ட் மாநிலத்தின் திட்டமிடல் துறைக்கு இந்த 4000 பெண் ஊழியர்களின் ஆட்சேர்ப்பு செயல்முறை குறித்த விபரத்தைத் தெரிவித்தது. உத்தரகண்ட் அரசின் தலைமை அமைச்சர் புஷ்கர் தாமி தலைமையிலான அரசு அம்மாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் தற்போதைய முயற்சிகளுக்கு டாடா குழுமம் உதவி செய்துள்ளது.

இந்த 4000 பெண் ஊழியர்களைத் தமிழ்நாட்டின் ஓசூர் மற்றும் கர்நாடகாவின் கோலார் ஆகியவற்றில் உள்ள டாடாவின் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலைகளில் பணியில் அமர்த்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் திறன் வாய்ந்த ஊழியர்கள் கூட்டம் கூட்டமாக இருக்கும் போது தமிழ்நாட்டில் இருக்கும் தொழிற்சாலைக்கு ஏன் டாடா குழுமம் உத்தரகண்ட் மாநிலத்தில் இருந்து ஏன் ஆட்களை கொண்டு வர வேண்டும்..?
டாடா குழுமம் உத்தரகண்ட் மாநிலத்தில் தேர்வு செய்யும் ஊழியர்களின் கல்வித் தகுதியைப் பார்த்தாலே இதற்கான பதில் கிடைத்துவிடும். டாடா குழுமம் உத்தரகண்ட் மாநிலத்தில் தேர்வு செய்யப்படும் 4000 பெண் ஊழியர்களுக்குத் தகுதி வரைமுறையில் 10 அல்லது 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் NAPS-க்கு தகுதியானவர்கள். 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு அல்லது ITI டிப்ளோமாக்கள் கொண்டவர்கள் NATS-க்கு தகுதியானவர்கள் என அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் படித்த திறன் வாய்ந்த ஊழியர்கள் ஏராளமாக இருந்தாலும், குறைந்த கல்வித் தகுதி உடையோர் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதேவேளையில் டாடா குழுமம் தனது ஓசூர் தொழிற்சாலையை மிகப்பெரிய முதலீட்டில் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறது. இந்த விரிவாக்கத்திற்குத் தேவையான ஊழியர் படையை வேகமாகத் திரட்ட வேண்டும் என்பதற்காக டாடா குழுமம் வெளி மாநிலத்தில் இருந்து ஊழியர்களைத் தேர்வு செய்திருக்கலாம் எனத் தெரிகிறது.
ஆனால் டாடா குழுமம் இதுவரையில் தமிழ்நாட்டில் ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாக எந்த இடத்திலும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 4000 வெளி மாநில ஊழியர்கள் ஓசூர் மற்றும் கோலார் தொழிற்சாலையில் நியமிப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
மேலும் டாடா குழுமம் உத்தரகண்ட் மாநிலத்தில் தேர்வு செய்யப்படும் 4000 பெண் ஊழியர்களுக்கு சில தேர்வு நடைமுறைகளும் உண்டு. தகுதியைத் தாண்டி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஷாப் ஃப்ளோர் தொழில்நுட்ப வல்லுநர்களாக (shop floor technicians) நியமிக்கப்படுவார்கள்.
மேலும் தேர்வு செய்யப்பட்ட ஊழியர்களுக்குச் சம்பளத்திற்குக் கூடுதலாக, டாடா குழுமம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஊழியர்களுக்குத் தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து வசதி வழங்கும். இந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் 1961 ஆம் ஆண்டின் திறன் பயிற்சிச் சட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படுவார்கள். NAPS மற்றும் NATS திட்டங்களின் கீழ் அவர்களது தகுதிகளின் அடிப்படையில் நியமன கடிதங்களைப் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications