இந்தியாவில் குவிக் காமர்ஸ் துறை வர்த்தகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், இந்த பஸ்ஸில் பல முன்னணி ஆன்லைன் தளங்களும், ரீடைல் நிறுவனங்கள் ஏற்ற முயற்சி செய்து வருகிறது. குவிக் காமர்ஸ் துறையில் ஏற்கனவே செப்டோ, சோமேட்டோ-வின் Blinkit, ஆகியவை பெரும் ஆதிக்கம் செய்து வரும் வேளையில் புதிதாக வருபவர்கள் வெற்றி பெறுவது மிகவும் கடினமாகியுள்ளது.
ஆனால் குவிக் காமர்ஸ் துறைக்குள் வராவிட்டால் தற்போது செய்து வரும் ஆன்லைன் வர்த்தகமும் இழக்க நேரிடம் என்ற மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு உள்ளதால் ரீடைல் வர்த்தகத்தில் இருக்கும் அனைத்து முக்கியமான பிராண்டுகளும் தற்போது குவிக் காமர்ஸ் துறைக்குள் வர துவங்கியுள்ளது.

இந்த நிலையில் டாடா குழுமம் ஏற்கனவே ஆன்லைன் ரீடைல் வர்த்தக துறையில் பிக் பேஸ்கட், ஸ்டார் பஜார் உட்பட பல நுகர்வோர் பிராண்டுகள் மூலம் இருந்தாலும், குவிக் காமர்ஸ் துறையில் இதுவரையில் இல்லை. இதனால் இத்துறையில் முத்திரை பதிக்க தயாராகி வருகிறது டாடா குழுமம்.
டாடா குழுமம் மாபெரும் நம்பிக்கை உடன் அறிமுகம் செய்த NEU ஆப், எதிர்பார்த்தபடி அதிகப்படியான வர்த்தகத்தை ஈர்க்கவில்லை. இந்த நிலையில் டாடா குழுமம் அடுத்தடுத்து பல புதிய சேவைகளை அறிமுகம் செய்து வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
அந்த வகையில் டாடா நிர்வாகம் குவிக் காமர்ஸ் துறையில் இறங்குவதற்காக நியூ ஃப்ளாஷ் (Neu Flash) என்ற பெயரில் தனது சொந்த குவிக் டெலிவரி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. நகர்ப்புறங்களில் வேகமாக வளர்ந்து வரும் குவிக் டெலிவரி தேவையில் சிறிய பங்கீட்டையாவது பிடித்துவிடமாட்டோமா என்ற முக்கியமான இலக்குடன் களத்தில் இறங்கியுள்ளது.
நியூ ஃப்ளாஷ் ஆரம்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டும் காய்கறி, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் ஃபேஷன் தயாரிப்புகளை வழங்குவதில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இந்த சேவைக்கு டாடா குழுமம் பிக் பேஸ்கட், டாடா கிளிக் ஆகியவற்றின் கட்டமைப்பை பயன்படுத்த உள்ளது.
டாடா குழுமத்தின் இந்த முயற்சி, சோமேட்டோவின் பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மற்றும் செப்டோ போன்ற முக்கிய நிறுவனங்களுக்கு மத்தியிலான போட்டியை அதிகரிக்கும். இந்த 4 நிறுவனங்கள் மட்டுமே தற்போது 85% க்கும் அதிகமான சந்தைப் பங்கைக் கொண்டுள்ளன.
சமீபத்தில் குவிக் காமர்ஸ் துறை வளர்ச்சியை பார்த்து ஆடிப்போன ஈகாமர்ஸ் சம்ராஜ்ஜியமான ஃப்ளிப்கார்ட் "மினிட்ஸ்" என்ற சேவையை துவங்கியுள்ளது. இதோடு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ந் ஜியோமார்ட்டின் புதுப்பிக்கப்பட்ட குவிக் காமர்ஸ் சேவையும் சந்தையில் குறிப்பிடத்தக்க பங்கைப் பெற முயற்சித்து வகுகிறது.
ஜியோமார்ட் இதற்கு முன்பு 90 நிமிட டெலவிரியை வைத்திருந்தது, இதை திடிரென நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது இதை மீண்டும் பட்டி டிங்கரிங் பார்த்து குவிக் காமர்ஸ் டெலிவரி சேவையாக அறிமுகம் செய்யும் பணியில் ஈடுப்பட்டு உள்ளது அம்பானி நிர்வாகம்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications