பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பிப்ரவரி 29, 2024 அன்று இந்தியாவில் மூன்று செமிகண்டக்டர் தொழிற்சாலைகளை அமைக்க PLI திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் இரண்டு தொழிற்சாலைக்கான ஒப்புதல் டாடா குழுமத்திற்கானது. டாடா குழுமத்தின் இரு தொழிற்சாலைகளுக்கு மட்டும் 44,203 கோடி ரூபாயை மானியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியாகி நான்கு வாரங்களுக்குள் டாடா குழுமம் பாரதிய ஜனதா கட்சிக்கு 758 கோடி ரூபாய் நன்கொடை செய்ததுள்ளது. 2024 பொதுத் தேர்தலுக்கு முன்பு BJP-க்கு கிடைத்த மிகப்பெரிய தொகை இது என Scroll வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டாடா குழுமத்தில் இருக்கும் சுமார் 15 நிறுவனங்கள் 2024-25 ஆம் நிதியாண்டில் மட்டும் மொத்தம் 915 கோடி ரூபாயை அரசியல் கட்சிக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது என தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இதில் டாடா சன்ஸ் மட்டும் 308 கோடி ரூபாய், டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களும் நன்கொடை அளித்துள்ளது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் மத்திய அரசு டாடா குழுமத்திற்கு அளிக்கப்பட்ட ஒப்புதல் பிப்ரவரி 2024, நன்கொடை அளிக்கப்பட்டது ஏப்ரல் 2024, அதுவும் பொது தேர்தல் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு இந்த நன்கொடை செய்யப்பட்டு உள்ளது.
இந்தப் பணம் ப்ரோக்ரெஸிவ் ஈலெக்டோரல் டிரஸ்ட் மூலம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த டிரஸ்ட் ஏப்ரல் 2024-ல் 914.9 கோடி ரூபாயை 10 கட்சிகளுக்கு அனுப்பியது. இதில் BJP-க்கு 757.6 கோடி ரூபாய், அதாவது மொத்த தொகையில் 82 சதவீதம். காங்கிரஸ் 77.3 கோடி ரூபாய் பெற்றது. மற்ற எட்டு கட்சிகளுக்கு தலா 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
டிரஸ்ட்டின் செயல்பாடு:
ப்ரோக்ரெஸிவ் ஈலெக்டோரல் டிரஸ்ட் 2021 முதல் 2024 வரை எந்தப் நன்கொடையும் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கவில்லை. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு மட்டும் திடீரென செயல்படத் தொடங்கியது. இதற்கு முன்பு 2018-19-ல் இந்த டிரஸ்ட் மூலம் 478 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இதில் BJP-க்கு 356 கோடி ரூபாய் சென்றது. 2014-15 முதல் 2017-18 வரையிலும், 2019-20-ல் எந்தப் பங்களிப்பும் இல்லை. இந்தத் திடீர் செயல்பாடு கேள்விகளை எழுப்பியுள்ளது என Scroll வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செமிகண்டக்டர் திட்டமும் அரசியல் கட்சி நன்கொடையும்:
டாடா குழுமம் மட்டுமல்ல, செமிகண்டக்டர் திட்டங்களுக்கு அரசு மானியம் பெற்ற பிற நிறுவனங்களும் BJP-க்கு பெரும் தொகை நன்கொடையை இக்காலக்கட்டத்தில் வழங்கியுள்ளன. முருகப்பா குழுமத்தின் திட்டத்துக்கு 3,501 கோடி ரூபாய் மானியம் அறிவிக்கப்பட்ட சில நாட்களில் அந்த நிறுவனம் BJP-க்கு 125 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தது என scroll வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கய்னெஸ் டெக்னாலஜியின் நிறுவனர் ரமேஷ் குன்ஹிகண்ணன் 2023-24-ல் 12 கோடி ரூபாய் வழங்கினார். செப்டம்பர் 2024-ல் அவரது நிறுவனம் குஜராத்தில் செமிகண்டக்டர் அலை அமைக்க ஒப்புதல் பெற்றது என Scroll தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகளுக்கான நன்கொடையில் தெளிவின்மை:
2013-ல் UPA அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஈலெக்டோரல் டிரஸ்ட் திட்டம் நிறுவனங்களின் பங்களிப்பை அரசியல் கட்சிகளுக்கு வழங்க உதவுகிறது. இவை தங்கள் நிதி ஆதாரங்களையும் பெறுநர்களையும் தேர்தல் ஆணையத்துக்கு அறிவிக்க வேண்டும். ஆனால் எந்த நிறுவனம் எந்தக் கட்சிக்கு கொடுத்தது என்பதை நேரடியாகத் தொடர்புபடுத்துவது கடினம். இதனால் அரசியல் நிதியில் தெளிவின்மை நீடிக்கிறது. சாதாரண மக்களுக்கு இது "பெரிய நிறுவனங்கள் அரசியலுக்கு பணம் கொடுப்பது நமது வரி பணத்துடன் தொடர்புடையதா?" என்ற கேள்வியை எழுப்புகிறது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications