இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமம் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் வர்த்தகக் குழுமமாக விளங்கி வரும் டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமாக விளங்கும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் பதவியில் இருக்கும் என்.சந்திரசேகரன் கட்டுப்பாட்டில் 3 புதிய நிறுவனங்களைக் கொண்டு வர டாடா குழுமம் மத்திய கார்பரேட் விவகார அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்குமா..?
டாடா குழுமம் கடந்த 5 வருடத்தில் சந்திரசேகரன் தலைமையில் பல புதிய துறையில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை டாடா குழும நிறுவனங்கள் பதிவு செய்துள்ளது. இதனால் மத்திய அரசுக்கும் சரி, டாடா நிர்வாகத்திற்கும் சந்திரசேகரனுக்குக் கூடுதல் பொறுப்பு வழங்குவதில் எவ்விதமான தயக்கமும் இருக்காது.
என். சந்திரசேகரன்
என். சந்திரசேகரன் டாடா குழுமத்தின் கீழ் இருக்கும் பல நிறுவனங்களின் மொத்த ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மாக இருப்பது மட்டும் அல்லாமல் டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ், இந்தியன் ஹோட்டல் கோ, டாடா பவர், ஜாகுவார் லேண்ட் ரோவர், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் டாடா கெமிக்கல்ஸ் ஆகிய நிறுவனங்களின் சேர்மன் ஆகவும் இருக்கிறார்.
3 புதிய நிறுவனங்கள்
இந்நிலையில் கடந்த ஒரு வருடத்தில் டாடா குழுமத்தில் புதிதாக உருவாகி இருக்கும் ஏர் இந்தியா, டாடா டிஜிட்டல் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய நிறுவனங்களையும் சந்திரசேகரன் கீழ் நேரடி நிர்வாகத்திற்குக் கொண்டு வர இந்த 3 நிறுவனத்திலும் சேர்மன் பதவியை அளிக்க டாடா குழுமம் தற்போது மத்திய கார்பரேட் விவகார அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
இந்திய நிறுவன சட்டம்
இந்திய நிறுவன சட்டம், 2013 -இன் கீழ், ஒரு தனிநபர் ஒரே நேரத்தில் 20 நிறுவனங்களுக்கு அதிகமாக இயக்குநராகப் பதவி வகிக்க முடியாது. இந்த 20 நிறுவனங்களின் வரம்பில் தனியார் நிறுவனங்கள் மற்றும் மாற்று இயக்குநர்கள் பதவிகளும் அடக்கம். மேலும், 20 நிறுவனங்கள் வரம்பில், ஒருவர் 10 பொது நிறுவனங்களுக்கு மேல் இயக்குநராக இருக்க முடியாது.
டாடா குழும வழக்கம்
இப்படியிருக்கையில் டாடா குழும வழக்கத்தின் படி டாடா சன்ஸ் சேர்மன், இக்குழுமத்தின் அனைத்து நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இருப்பார்கள், இதனால் சந்திரசேகரன் தலைமை வகிக்கும் 3 புதிய நிறுவனங்களுக்கு ஒப்புதல் பெறவே தற்போது டாடா குழுமம் மத்திய கார்பரேட் விவகார அமைச்சகத்திடம் ஒப்புதல் பெற காத்திருக்கிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications