டாடா மோட்டார்ஸ் புதிய திட்டம்.. அசோக் லேலண்ட், எய்ச்சர் உடன் போட்டி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தனது கார் உற்பத்தி மற்றும் வர்த்தகத்திற்கான 5 ஆண்டு திட்டத்தைச் சிறப்பாகத் திட்டமிட்டு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை 3 பிரிவுகளாகப் பிரித்து முதலீட்டை ஈர்த்தது பெரிய அளவில் டாடா நிர்வாகத்தின் திட்டமிடலில் பயன்பட்டு உள்ளது. தற்போது டாடா மோட்டார்ஸ் தனது கவனத்தை வர்த்தக வாகன பிரிவின் மீது திருப்பியுள்ளது.

 1,20,000 ரூபாய் போனஸ்.. கூகுள் அறிவிப்பால் ஊழியர்கள் செம குஷி..! 1,20,000 ரூபாய் போனஸ்.. கூகுள் அறிவிப்பால் ஊழியர்கள் செம குஷி..!

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ் எலக்ட்ரிக் கார் உற்பத்தியில் இந்தியாவின் முன்னோடியாக விளங்கி வரும் நிலையில், வர்த்தகம் மற்றும் உற்பத்தி இலக்கு என அனைத்தையும் திட்டமிட்டு முழு ஈடுபாட்டுடன் பணியாற்றி வருகிறது. இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் தனது கவனத்தை வர்த்தக வாகனங்கள் பிரிவின் வளர்ச்சி மீது திருப்பியுள்ளது.

டிரக் உற்பத்தி

டிரக் உற்பத்தி

இந்தியாவின் மிகப்பெரிய டிரக் உற்பத்தி நிறுவனமாக இருக்கும் டாடா மோட்டார்ஸ் தனது வர்த்தக வாகன பிரிவை வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்லவும், அதேவேளையில் தனது எலக்ட்ரிக் வாகனங்கள் கொள்கைக்கு அடிப்படையாகக் கொண்டு செல்ல வேண்டும் என முடிவு செய்துள்ளது.

1 பில்லியன் டாலர் முதலீடு

1 பில்லியன் டாலர் முதலீடு

இதன்படி டாடா மோட்டார்ஸ் தனது வர்த்தக வாகன பிரிவில் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளுக்குச் சுமார் 1 பில்லியன் டாலர் அதாவது 7500 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளது. டாடா மோட்டார்ஸ்-ன் இந்த முடிவு இத்துறையில் முன்னோடியாக இருக்கும் அசோக் லேலண்ட், எய்ச்சர்-க்கு பெரும் சவாலாக இருக்கும்.

புதிய திட்டம்

புதிய திட்டம்

டாடா மோட்டார்ஸ் இப்புதிய முதலீட்டின் மூலம் டிரக் பிரிவில் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதேவேளையில் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கும் ஒரே பிளாட்பார்ம்-ல் CNG, LNG மற்றும் டீசல் பவர்டிரைன் கொண்ட வாகனங்களையும் உருவாக்க முடிவு செய்துள்ளது. இது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் நடக்கும் மிகப்பெரிய மாற்றம்.

எலக்ட்ரிக் டிரக்

எலக்ட்ரிக் டிரக்

டாடா மோட்டார்ஸ் தற்போது எடுத்துள்ள முடிவுகளின் படி சிறிய வர்த்தகங்களை எலக்ட்ரிக் வாகனங்களாகவும், நீண்ட தூரம் பயணிக்கும் பெரிய வர்த்தக வாகனங்களை எரிவாயு மற்றும் எலக்ட்ரிக் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களாகத் தயாரிக்க உள்ளது.

இரண்டு எரிசக்தி

இரண்டு எரிசக்தி

அதாவது ஓரே வாகனத்தில் இரண்டு எரிசக்தியில் இயங்கும் வாகனங்களைத் தயாரிக்க உள்ளது டாடா. இந்தக் காம்பினேஷன் சிறப்பான முறையில் இந்திய சாலைகளுக்குப் பயன்படுத்த முடியும் எனக் கணித்துள்ளது டாடா மோட்டார்ஸ். இந்திய ஆட்டோமொபைல் துறையில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு டாடா முன்னோடியாக இருக்கும் என டாடா மோட்டார்ஸ் கிரிஷ் வாக் தெரிவித்துள்ளார்.

டாடா ரியல் எஸ்டேட்

டாடா ரியல் எஸ்டேட்

இதே வேளையில் டாடா ரியாலிட்டி அண்ட் இன்பராஸ்டக்சர் நிறுவனம் 150 கோடி ரூபாய் முதலீட்டில் டெல்லி ஹெய்லி சாலையில் ஆடம்பர அப்பார்ட்மென்ட் திட்டத்தைத் துவங்க உள்ளது. தற்போது இதற்கான ஒப்புதல்களை NDMC அமைப்பிடம் இருந்து பெற்று வருகிறது டாடா ரியாலிட்டி.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata Group: bigger plans in commercial vehicle business and Real Estate

Tata Group: bigger plans in commercial vehicle business and Real Estate டாடா மோட்டார்ஸ் புதிய திட்டம்.. அசோக் லேலண்ட், எய்ச்சர் உடன் போட்டி..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X