டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் லிமிடெட், பாட்டில் தண்ணீர் தயாரிப்பு நிறுவனமான பிஸ்லரி இன்டர்நேஷனல்-ஐ வாங்குவதற்கான பேச்சுவார்த்தையை முற்றிலும் நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனம் இந்திய ரீடைல் சந்தையில் தனது வர்த்தகத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் பல முக்கியமான மாற்றங்களையும், விரிவாக்கத்தையும் செய்துள்ளது.
இதில் முக்கியமான ஒன்றாக தான் பிஸ்லரி இன்டர்நேஷனல் வாங்கும் திட்டம்.
பிஸ்லரி இண்டர்நேஷ்னல்
பிஸ்லரி இண்டர்நேஷ்னல் நிறுவனத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்த நிலையில், இந்நிறுவனத்தின் பெரும் பகுதி பங்குகளை விற்பனை செய்வதாக இதன் தலைவர் ரமேஷ் சவுகான் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை
இதை தொடர்ந்து தான் டாடா மற்றும் பிஸ்லரி நிர்வாகம் பங்கு விற்பனை குறித்த பேச்சுவார்த்தையை துவங்கியது. ஆனால் தற்போது டாடா குழுமம் இந்த பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறியுள்ளதாக அறிவித்துள்ளது.
அதானி, ரிலையன்ஸ்
அதானி, ரிலையன்ஸ் குழுமத்தை போலவே வர்த்தகத்தை வேகமாக விரிவாக்கம் செய்வதில் அதிகப்படியான கவனத்தை செலுத்தி வருகிறது டாடா குழுமம். இந்த நிலையில் தான் வர்த்தக விரிவாக்கத்திற்காக இந்தியாவின் மிகப்பெரிய பாட்டில் குடிநீர் நிறுவனமாக விளங்கும் பிஸ்லரி இண்டர்நேஷ்னல்-ன் பெரும் பகுதி பங்குகளை கைப்பற்ற பல வாரங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்து டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனம். இந்த பேச்சுவார்த்தையில் டாடா குழுமத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு பெரிய பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது.
டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ்
டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பிஸ்லேரி நிறுவன பங்குகள் வாங்குவதற்கான வாய்ப்புகளும் பேச்சுவார்த்தையும் மொத்தமாக நிறுத்தியுள்ளது. மேலும் இரு நிறுவனங்களும் இந்த பேச்சுவார்த்தை காலத்தில் எந்தவொரு உறுதியான ஒப்பந்தம் அல்லது உறுதியை அளிக்கவில்லை என்று டாடா குழுமம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
20,000 கோடி ரூபாய் சந்தை
பிஸ்லரி நிறுவனம் இந்திய பாட்டில் குடிநீர் வர்த்தக சந்தையில், 32% சந்தைப் பங்கைக் கொண்டு உள்ளது. 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீர் வர்த்தக சந்தையில் பிஸ்லரி முன்னணியில் இருப்பது மட்டும் அல்லாமல் அதிக ஆதிக்கம் உள்ளது. பிஸ்லரி உடனான சாத்தியமான ஒப்பந்தம் டாடா குழுமத்தை தொகுக்கப்பட்ட நீர் நிறுவனமாக மாற்றும்.
முதலீடு
பிஸ்லரி இண்டர்நேஷ்னல் தனது நிறுவனத்தின் மதிப்பை மிகைப்படுத்தி கணக்கிட்டு உள்ளதால், இந்த விலையில் முதலீடு செய்ய முடியாத என்பதால் டாடா குழுமத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது என சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
அதிகப்படியான பங்குகள்
டாடா குழுமம் பிஸ்லரி நிறுவனத்தில் சுமார் 1 பில்லியன் டாலர் அளவில் முதலீடு செய்து அதிகப்படியான பங்குகளை வாங்க திட்டமிட்டு இருந்தது, தற்போது மதிப்பீடு பிரச்சனை காரணமாக டாடா குழுமத்தின் கனவு திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.
பிஸ்லரி வர்த்தகம்
இந்தியாவில், பிஸ்லரி இன்டர்நேஷனல் 150க்கும் மேற்பட்ட உற்பத்தி ஆலைகளையும், 7,500 டிரக்குகளுடன் 6,000க்கும் அதிகமான விநியோகஸ்தர்களின் வலையமைப்பையும் கொண்டுள்ளது. மினரல் வாட்டர் பிராண்டான பிஸ்லரி குடிநீர் மட்டும் அல்லாமல் கூடுதலாக இந்நிறுவனம் பிரீமியம் ஸ்பிரிங் வாட்டர் பிராண்டான வேடிகாவை விற்பனை செய்கிறது. அதன் போர்ட்ஃபோலியோவில் கார்பனேற்றப்பட்ட பானங்கள் லிமோனாட்டா மற்றும் ஸ்பைசி, சோடா மற்றும் பழ பானங்கள் ஆகியவை அடங்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications