இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் இந்த ஏஐ போட்டியில் தனித்து நின்றால் வெற்றி பெற முடியாது என்பதை தெளிவாக உணர்ந்த நிலையில், முக்கியமான துறைக்களுக்கு தேவையான கடினமான சாப்ட்வேர்-களை உருவாக்க முன்னணி ஏஐ நிறுவனங்களுடன் கூட்டணியை உருவாக்கியுள்ளது.
சமீபத்தில் இன்போசிஸ் நிறுவனம் மென்பொருள் உருவாக்கும் பிரிவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் அந்த்ரோபிக் (Anthropic) உடன் கூட்டணி சேர்ந்தது. பெங்களூரில் இந்நிறுவனம் அலுவலகத்தை திறந்த கையோடு அறிவிக்கப்பட்ட மிகப்பெரிய கூட்டணி இது தான்.

இந்த நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமாக டிசிஎஸ், தற்போது சாட்ஜிபிடி உடன் இணைந்துள்ளது. இந்தியாவில் 100மெகாவாட் டேட்டா சென்டர் உருவாக்கும் திட்டத்தில் இன்று டிசிஎஸ் மற்றும் சாட்ஜிபிடி-யின் உரிமையாளரான ஒப்பன்ஏஐ உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதோடு மற்றொரு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
டிசிஎஸ் மற்றும் ஒப்பன்ஏஐ மத்தியில் கையெழுத்தான தனி ஒப்பந்தம் ஒன்றின் கீழ் டாடா குரூப் அடுத்த சில ஆண்டுகளில் ChatGPT Enterprise-ஐ நிறுவனம் முழுவதும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான டாடா குழும ஊழியர்கள் ChatGPT-ஐ பயன்படுத்த உள்ளனர். ஓபன்ஏஐயின் தாய் நிறுவனமான ChatGPT இந்தியாவில் 10 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களை கொண்டுள்ளது.
டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் இப்போது TCS-இன் AI உத்தியை நேரடியாக வழிகாட்டி வருகிறார். அவரது முக்கிய திட்டங்களில் ஒன்று - டாடா குழுமத்தின் அனைத்து நிறுவனங்களுக்கும் (டாடா மோட்டார்ஸ், ஏர் இந்தியா, டாடா ஸ்டீல் உள்ளிட்டவை) TCS-ஐ இனி நிரந்தர AI மற்றும் தொழில்நுட்ப பங்குதாரராக (default AI partner) மாற்றுவது தான்.
இதன் மூலம் குழுமத்தின் அனைத்து தொழில்களும் AI-யை வேகமாகப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் டிசிஎஸ்-ம் அனைத்து துறையிலும் ஏஐ அடிப்படையிலான சேவையில் அனுபவத்தை பெறும். மேலும், AI தொடர்பான சிறிய நிறுவனங்களை வாங்குவதற்கான (acquisitions) திட்டங்களும் ஆராயப்பட்டு வருகின்றன. இது TCS-இன் AI திறன்களை வேகமாக வளர்க்க உதவும்.
மொத்தத்தில், ஓபன்ஏஐயுடனான டிசிஎஸ் ஒப்பந்தம் இந்திய ஏஐ உள்கட்டமைப்பு துறையில் பெரும் மைல்கல்லாக அமைந்துள்ளது. இது உலகளாவிய ஏஐ திட்டங்களில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவது மட்டும் அல்லாமல் ஐடி நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு இது நம்பிக்கை அளிக்கும் செய்தியாக உள்ளது.
Anthropic - Infosys கூட்டணி
அந்த்ரோபிக் (Anthropic) மற்றும் இன்போசிஸ் (Infosys) நிறுவனங்கள் தொலைத்தொடர்பு, நிதி சேவைகள், உற்பத்தி மற்றும் மென்பொருள் மேம்பாடு உள்ளிட்ட பல துறைகளுக்கு ஏற்ற நிறுவன அளவிலான ஏஐ சேவைகளை உருவாக்க இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த கூட்டணி மூலம் இன்போசிஸ் ஏஐ சேவையை மிகப்பெரிய அளவில் பயன்படுத்த போவது உறுதியானது, இதனால் வாயிலாக 2 நாட்களாக இன்போசிஸ் பங்குகள் உயர்ந்து வருகிறது.
இந்த கூட்டாணி மூலம் அந்த்ரோபிக் நிறுவனத்தின் Claude மாடல்கள் மற்றும் Claude Code தொழில்நுட்பம், இன்போசிஸின் AI சேவைத் தளம் Topaz உடன் ஒருங்கிணைக்கப்படுகிறது. இதனால் நிறுவனங்கள் மென்பொருள் மேம்பாட்டை வேகமாக செய்யவும், கட்டுப்பாடுகள் நிறைந்த துறைகளிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாக கட்டுப்பாடுகளுடன் ஏஐ தொழில்நுட்பத்தை பாதுகாப்பாக பயன்படுத்தவும் முடியும்.


Click it and Unblock the Notifications