டெல்லி: எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய வாகன விற்பனையை தொடங்க இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் டெஸ்லா நிறுவனம் தன்னுடைய வாகனங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்காகவும் திட்டமிட்டுள்ளது.
இந்த சூழலில் டெஸ்லா நிறுவனத்திற்கு இந்தியாவில் வாகன உற்பத்திக்கான பாகங்களை விநியோகம் செய்யும் முக்கியமான ஒப்பந்தங்களை டாடா குழுமத்துக்கு உட்பட்ட நிறுவனங்கள் பெற இருக்கின்றன. இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவலின் படி டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் விநியோக தளங்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய எலக்ட்ரிக் வாகன உற்பத்தி ஆலையை நிறுவும் போது முக்கியமான வாகன பாகங்களை இந்திய நிறுவனங்களிடம் இருந்து தான் கொள்முதல் செய்யும்.

வாகன உற்பத்திக்கு தேவையான castings, forgings, electronics மற்றும் fabrication items ஆகிய முக்கிய பொருட்களை இந்தியாவிலே கொள்முதல் செய்தால் தான் டெஸ்லா நிறுவனத்துக்கு லாபம் கிடைக்கும். ஏற்கனவே டாடா குழுமத்துக்கு சொந்தமான நிறுவனங்கள் டெஸ்லாவுடன் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. Tata AutoComp, Tata Consultancy Services (TCS), Tata Technologies, Tata Electronics ஆகிய நிறுவனங்கள் சர்வதேச அளவிலான விநியோக ஒப்பந்தங்களில் டெஸ்லாவுடன் கையெழுத்திட்டுள்ளன.
2024 ஆம் நிதியாண்டில் மட்டும் டாடா குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் டெஸ்லா நிறுவனத்திற்கு 2 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான பொருட்களை வழங்கி இருக்கின்றனவாம். தற்போது டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு உள்ளேயே விற்பனையை தொடங்க இருப்பதால் வாகன உற்பத்திக்கான முக்கிய பாகங்களை தயாரித்து வழங்கும் முக்கியமான பணிகளை டாடா நிறுவனங்களுக்கு தான் வழங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தங்களுடைய வாகன உற்பத்திக்கு குறிப்பிட சில வரிச் சலுகைகளை பெறுவதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. டெஸ்லாவை பொறுத்தவரை இந்தியாவில் தங்களுடைய வாகனங்களை தயாரிப்பதற்காக wiring harnesses, electric motors, gearboxes, forged parts, castings, sheet metal, high-value electronics, suspension systems, electric powertrains ஆகியவற்றை கொள்முதல் செய்ய இருக்கிறது. இந்த விநியோக வாய்ப்பு டாடா நிறுவனங்களுக்கே கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஏற்கனவே டாடா ஆட்டோ நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான இன்ஜினியரிங் பொருட்களை டெஸ்லாவுக்கு வழங்கி வருகிறது. டிசிஎஸ் நிறுவனம் சர்க்யூட் போர்டு டெக்னாலஜியை டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கு வழங்கி வருகிறது. டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் நவீன சிப்புகளை தயாரித்து வழங்க இருக்கிறது. அதே போல டெஸ்லா நிறுவனம் ஏற்கனவே இந்தியாவை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களிடமிருந்து குறிப்பிட்ட சில பொருட்களை கொள்முதல் செய்து வருகிறது.
இந்திய சந்தையில் நுழைவதற்கு முன்பு முன் அனைத்து ஏற்பாடுகளை சரியாக செய்ய வேண்டும் என்பதில் டெஸ்லா தீவிரமாக இருக்கிறது. இந்தியாவில் தற்போதைக்கு விற்பனையை தொடங்கும் டெஸ்லா நிறுவனம் உற்பத்தி ஆலையை நிறுவ உள்ளது. தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்கள் இந்த ஆலையை பெறுவதில் போட்டி போடுகின்றன.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications