டாடா குழுமத்தில் முக்கிய பிரச்சனையாக இருந்த டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கு எவ்விதமான தளர்வும் இல்லை என ஆர்பிஐ இன்று அறிவித்துள்ளது. டாடா டிரஸ்ட் சார்பில் ஜிம்மி டாடா இன்று வெளியிட்ட விளக்கம் டாடா குழுமத்தில் பெரிய பிரளயத்தை உருவாக்கிய நிலையில் ஆர்பிஐ அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
நோயல் டாடா தலைமையிலான டாடா டிரஸ்ட் டாடா சன்ஸ் நிறுவனத்தை எக்காரணத்தைக் கொண்டும் பங்குச்சந்தையில் பட்டியலிடக்கூடாது என்பதில் திட்டவட்டமாக இருக்கும் வேளையில், என்.சந்திரசேகரன் தலைமையிலான டாடா சன்ஸ் நிர்வாகம் ஆர்பிஐ விதிமுறைகளைப் பின்பற்றவேண்டிய நெருக்கடியில் உள்ளது.

இந்த நிலையில் இன்று ஆர்பிஐ டாடா சன்ஸ் தலைமை நிதியியல் அதிகாரிக்கு அனுப்பிய கடிதத்தில் டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட வேண்டும் என்று RBI மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஆர்பிஐ தனது கடிதத்தில் டாடா சன்ஸ் நிறுவனம் NBFC மேலடுக்கு நிறுவனத்திற்கான அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என ஆர்பிஐ கூறியுள்ளது.
செப்டம்பர் மாதம் டாடா சன்ஸ் நிர்வாகம் CIC நிறுவனமாக இயங்குவதற்கு உரிமத்தைத் திருப்பி அளிக்கத் தயார் என ஆர்பிஐ-க்கு தெரிவித்த நிலையில் ஆர்பிஐ இதற்கு மறுப்பு தெரிவித்தது.
இதை தொடர்ந்து டாடா சன்ஸ் நிர்வாகம் அக்டோபர் 6ஆம் தேதி டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பட்டியலிடுவதற்காக விதிமுறைகள் தொடர்பாக வழிகாட்டுதல் வேண்டும் என கோரிக்கை வைத்து ஆர்பிஐக்கு கடிதம் அனுப்பியது, இதற்கான பதிலை இன்று கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.
இந்த கடித பரிமாற்றம் மூலம் டாடா சன்ஸ் நிர்வாகக் குழுவில் பங்குச்சந்தைப் பட்டியலிடுவது குறித்து விவாதிக்கப்பட்டதை ஆர்பிஐ உறுதி செய்துள்ளது, ஆயினும் டாடா சன்ஸ் அனுப்பிய கோரிக்கையில் எந்த விதிமுறை குறித்த விளக்கம் வேண்டும் என்பது குறித்து வெளிப்படையாகக் கேட்காதது மூலம் ஆர்பிஐ அனைத்து விதிமுறைகளையும் கடைப்படிக்கா வேண்டும், இதில் டாடா சன்ஸ் பங்குச்சந்தையில் பட்டியலிடுவது அடக்கம் என்பதையும் குறிப்பிட்டு, விதிமுறைகள் குறித்து ஏதேனும் தெளிவு தேவைப்பட்டால் அதற்கான விபரங்களுக்கு மீண்டும் தொடர்புகொள்ளலாம் என ஆர்பிஐ தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
டாடா டிரஸ்ட் அமைப்பு ஏற்கனவே டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதைத் தவிர்க்க டாடா எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் சொல்யூஷன் மற்றும் டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைப்பு மூலம் டாடா சன்ஸ் நிறுவனத்தின் ஆப்ரேட்டிங் வருமானத்தின் அளவு, NBFC கட்டமைப்பு வருமான அளவீட்டை காட்டிலும் அதிகமாகும்.
இதன் மூலம் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதில் இருந்து தப்பிக்கலாம் என்ற யோசனையை முன்வைத்துள்ளது. இதை டாடா சன்ஸ் ஆய்வு செய்துகொண்டு இருக்கும் போது ஆர்பிஐ புதிய கடிதம் மூலம் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதை வேகப்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications

