இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக விளங்கும் டாடா குழுமம் கடந்த வருடத்திற்கான சம்பளத்தை தனது உயர் அதிகாரிகளுக்கு வழங்கி வரும் வேளையில், எப்போதும் இல்லாத வகையில் பல முன்னணி நிறுவன தலைவர்களுக்கு சம்பளத்தை அள்ளிக் கொடுத்துள்ளது.
டாடா குழும நிர்வாகம் உயர் அதிகாரிகளுக்கும், மூத்த நிர்வாக தலைவர்களுக்கும் சம்பளத்தை அளிக்ககொடுக்க முக்கிய காரணம் 2022-23 ஆம் நிதியாண்டில் சுமார் 97 பில்லியன் டாலர் அளவிலான வருவாயை விற்பனை மூலம் பெற்று வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

சந்திரசேகரன் தலைமையிலான நிர்வாகம் பெரிய அளவில் பலன் அளித்து வரும் வேளையில் தற்போது புதிய மகுடமாக 97 பில்லியன் டாலர் வருவாயை பெற்றுள்ளது, டாடா குழுமத்தில் பல முன்னணி நிறுவனங்கள் சுமார் 20 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதன் எதிரொலியாக 2022-23 ஆம் நிதியாண்டில் சிறப்பாக செயல்பட்ட முன்னணி நிறுவனங்களின் தலைவர்களுக்கு அதிகப்படியான சம்பள உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமாக டாடா குழுமத்தின் கீழ் இருக்கும் இந்தியன் ஹோட்டல்ஸ், டாடா பவர், டிரென்ட், டாடா கன்ஸ்யூமர் ஆகிய நிறுவன தலைவர்கள் சுமார் 60 சதவீகதம் வரையில் அதிகப்படியான சம்பள உயர்வை பெற்றுள்ளனர்.
டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ்-ன் நிர்வாக குழுவின் கூட்டம் மே மாதம் நடந்தது, இக்கூட்டத்தில் நீண்ட காலமாக இயங்கி வரும் டாடா நிறுவனங்களில் தங்களின் தேவைக்கான நிதி போதுமான அளவுக்கு உள்ளது. இதேவேளையில் இனி வரும் காலத்தில் டாடா டிஜிட்டல் மற்றும் ஏர் இந்தியாவில் அதிகப்படியான முதலீடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
டாடா குழுமத்தின் கீழ் உலகளவில் 100க்கும் அதிகமான நிறுவனங்கள் இயங்கி வந்தாலும், மொத்த வர்த்தக அடிப்படையில் 10 வர்த்தக பிரிவின் கீழ் 30 நிறுவனங்கள் உள்ளது, மீதமுள்ள நிறுவனங்கள் கிளை மற்றும் ஹோல்டிங் நிறுவனங்களாக உள்ளது.
2022-23 ஆம் நிதியாண்டில் டாடா குழுமத்தின் கீழ் இருக்கும் இந்தியன் ஹோட்டல்ஸ் லாபம் 1003 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, கடந்த ஆண்டு 248 கோடி ரூபாய் நஷ்டத்தை எதிர்கொண்டது. இதேபோல் வருவாய் 90 சதவீதம் உயர்ந்து 5810 கோடி ரூபாயாக உள்ளது. இதன் மூலம் இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் சிஇஓ சம்பளம் 37 சதவீதம் உயர்ந்து 18.23 கோடி ரூபாயாக உள்ளது.
இதேவே டாடா குழுமத்தின் ரீடைல் செயின் நிறுவனமான டிரென்ட் லாபத்தில் 10 மடங்கு வளர்ச்சியும், வருவாயில் 80 சதவீத வளர்ச்சியும் பதிவு செய்துள்ளது. டிரென்ட் நிறுவனத்தின் சிஇஓ பி.வெங்கடேசலு சம்பளம் 62 சதவீதம் அதிகரித்து 5.12 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
டாடா கெமிக்கல்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஆர் முகுந்தன் 16% உயர்வுடன் 8 கோடி ரூபாயும், டாடா பவர் சிஇஓ பிரவீர் சின்ஹா, 16% உயர்வுடன் 9 கோடி ரூபாயும், டாடா கன்ஸ்யூமர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுனில் டிசோசா 24% உயர்வுடன் 9.5 கோடி ரூபாயும், வோல்டாஸ் தலைமை நிர்வாக அதிகாரி பிரதீப் பக்ஷி 22% உயர்வுடன் 3.8 கோடி ரூபாயும் சம்பளமாக பெற்றுள்ளனர்.
டிசிஎஸ்-ன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் 13% உயர்ந்து ₹29.1 கோடி பெற்றுள்ளார்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?



Click it and Unblock the Notifications