மகாராஜா-வுக்கு மீண்டும் ராஜ வாழ்க்கை.. ஏர் இந்தியாவுக்கு 100 நாள் திட்டம் போட்ட டாடா..!

தமிழரான சந்திரசேகரன் தலைமையிலான டாடா குழுமம் பல போட்டிக்கு இடையில் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை 18000 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றியது. ஏர் இந்தியாவில் ஏலம் அக்டோபர் மாதமே முடிந்திருந்தாலும், பல்வேறு காரணங்களுக்காக ஏர் இந்தியாவை டாடா குழுமத்திடம் ஒப்படைக்கத் தாமதமானது.

இந்நிலையில் மத்திய அரசு இன்று அதிகாரப்பூர்வமாக ஏர் இந்தியாவின் நிர்வாகத்தை டாடா நிறுவனத்திடம் ஒப்படைத்தது.

 100 நாள் திட்டம்

100 நாள் திட்டம்

ஏர் இந்தியாவை வெற்றிகரமாக டாடா குழுமம் கைப்பற்றியுள்ள நிலையில், இனி ஏர் இந்தியாவில் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட சேவை அளிக்கும் பொருட்டுப் பல இலக்குகள் உடன் டாடா குழுமத்தின் புதிய நிர்வாகம் 100 நாள் திட்டத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக விமானப் பயணிகளை ஏர் இந்தியாவில் இனி கெஸ்ட் அதாவது விருந்தினர் என அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

 கேபின் க்ரூ ஊழியர்கள்

கேபின் க்ரூ ஊழியர்கள்

மேலும் ஏர் இந்தியாவில் பணியாற்றும் அனைத்துக் கேபின் க்ரூ ஊழியர்களும் தங்களது BMI அளவீடுகளைச் சரிபார்க்கவும், ஸ்மார்ட் லுக் உடன் இருக்க வேண்டும் என டாடா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 புதிய விதிமுறைகள்

புதிய விதிமுறைகள்

இதேபோல் அனைத்து மட்ட ஊழியர்களுக்கும், குறிப்பாகப் பயணிகளிடம் உரையாடும் அனைத்து ஊழியர்களுக்கும் புதிய விதிமுறைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.

 ஆன்டைம் சேவை, உணவு தரம்

ஆன்டைம் சேவை, உணவு தரம்

டாடா குழுமத்திடம் தற்போது ஏர் இந்தியா நிர்வாகம் முழுமையாக வந்துள்ள காரணத்தால் ஆன் டைம் சேவை, விமானம் கிளம்பும் நேரத்திற்கு 10 நிமிடம் முன்னதாகக் கேட் க்ளோசிங், மேம்படுத்தப்பட்ட உணவு சேவைகளை இன்று முதல் கொடுக்க முடிவு செய்துள்ளது டாடா குழுமம்.

 விஸ்தாரா, ஏர் ஏசியா

விஸ்தாரா, ஏர் ஏசியா

டாடா குழுமத்திடம் ஏற்கனவே விஸ்தாரா, ஏர் ஏசியா இந்தியா என்ற இரு விமான நிறுவனங்கள் இருக்கும் நிலையில், தற்போது ஏர் இந்தியாவை 3வது நிறுவனமாகக் கைப்பற்றியுள்ளது. டாடா குழுமம் ஏற்கனவே விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியாவை நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில் ஏர் இந்தியா-வை கைப்பற்றியது குறித்து விமர்சனம் இருக்கிறது.

 கடன் உதவு

கடன் உதவு

ஆனால் இதேவேளையில் ஏர் இந்தியா-வை ஏலத்தில் கைப்பற்றிய பின்பு டாடா குழுமத்திற்கு ஏர் இந்தியா-வை கைப்பற்றுவதற்கும், இயக்குவதற்கும் எஸ்பிஐ தலைமையிலான வங்கி அமைப்பு போதுமான கடனை அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கி உடன் பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளும் இணைந்து கடன் அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

 141 விமானங்கள்

141 விமானங்கள்

டாடா குழுமம் ஏர் இந்தியாவைக் கைப்பற்றுவதன் மூலம் 117 விமானங்களும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிரிவில் 24 விமானங்களும் பெற உள்ளது. இதோடு இந்திய விமான நிலையத்தில் 4400 உள்நாட்டு மற்றும் 1800 வெளிநாட்டு லேண்டிங் மற்றும் பார்க்கிங் ஸ்லாட் பெற உள்ளது. இது சேவை விரிவாக்கத்திற்குப் பெரிய அளவில் உதவும்.

 உலகத் தர சேவை

உலகத் தர சேவை

ஏர் இந்தியா கைப்பற்றல் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம், டாடா குழுமத்திற்கு மீண்டும் ஏர் இந்தியாவை அழைத்து வந்ததில் பெருமை கொள்கிறோம். உலகத் தரம் வாய்ந்த விமானச் சேவை அனைவரும் இணைந்து உருவாக்க உள்ளோம் என ஏர் இந்தியாவைக் கைபற்றிய பின்னர் டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+