டாடா குழுமத்திற்கு சொந்தமான டாடா சன்ஸ் நிறுவனம் சமீபத்தில் 2024ம் ஆண்டிற்கான அதன் ஆண்டு அறிக்கையை வெளியிட்டது. அதன்படி, நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பெரும் டிவிடெண்ட் தொகையை வழங்கியது தெரியவந்துள்ளது. இது கடந்த 2023ம் நிதியாண்டுடன் ஒப்பிடும் போது, டிவிடெண்ட்டை இரட்டிப்பாக்கியுள்ளது. டாடா குழுமத்திற்கு சொந்தமான நிறுவனமான டாடா சன்ஸ் நிதியாண்டில், நிறுவனம் ரூ. 35,000 டிவிடெண்ட் வழங்கியுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. இது இதுவரை இல்லாத அதிகபட்சமாகவும், முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு ஆகும். 2023 நிதியாண்டில், டாடா சன்ஸ் 1750 சதவிகிதம் அதாவது 17,500 ரூபாய் டிவிடெண்ட் வழங்கியுள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் செயல்திறனின் அடிப்படையில், இயக்குநர்கள் ஒரு சாதாரண பங்கிற்கு 3500 சதவீதம் வீதம் ரூ. 35,000 டிவிடெண்டை பரிந்துரைத்துள்ளதாக டாடா சன்ஸ் அதன் ஆண்டு அறிக்கையில் கூறியுள்ளது. இது முந்தைய ஆண்டு 1750 சதவீதம் வீதம் ரூ. 17,500 ஆகும். டிவிடெண்ட் அதன் பங்குதாரர்களால் அங்கீகரிக்கப்பட்டால், ரூ.1,414.51 கோடி ரொக்கம் ஆனது வெளியேற்றப்படும்.2023 நிதியாண்டில், டாடா குழும நிறுவனத்தின் டிவிடெண்ட் ஆனது 4,04,146 சாதாரண பங்குகளில் ரூ.707.26 கோடியாக இருந்தது.

FY24 இல் டாடா சன்ஸ் டிவிடெண்ட்டை இரட்டிப்பாக்கியது ஏன்?
2024ம் நிதியாண்டில் வழங்கிய டிவிடெண்ட் அளவைக் குறிப்பிடுகையில், டாடா சன்ஸ் நிறுவனம் இந்த ஆண்டில் நிறுவனத்தின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டதாகும். டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனம் 2023-24 நிதியாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 74 சதவீதம் உயர்ந்து ரூ.49,000 கோடியாக இருந்தது.
நிறுவனம் ஆண்டு அடிப்படையில் 25 சதவீதம் அதிகரித்து ரூ.43,893 கோடியாகவும், வரிக்கு பிந்தைய லாபம் 57 சதவீதம் உயர்ந்து ரூ.12,521.6 கோடியாகவும் உள்ளது. மார்ச் 2024 இறுதியில் குழுமத்தின் கடன் ரூ.20,642.47 கோடியும், நிகரப் பணமாக ரூ.2,679.19 கோடியும் இருந்ததாக கூறியுள்ளது.
N சந்திரசேகரன் சம்பளம் 2024
டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் 2024 நிதியாண்டில் ரூ 135 கோடியை சம்பளம் பெற்றுள்ளார். இது முந்தைய ஆண்டை விட 20 சதவீதம் அதிகமாகும். இதன் மூலம், அவர் இந்திய நிறுவனத்தில் அதிக சம்பளம் வாங்கும் நிர்வாகியாக தனது பதவியைத் தக்க வைத்துக் கொண்டார். 23ஆம் நிதியாண்டில் சந்திரசேகரன் ரூ.113 கோடி சம்பாதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications