TIDCO உடன் டாடா குழுமம் இணைந்து ஓசூரில் மெகா திட்டம்.. பாக்ஸ்கான் உடன் போட்டி..!

இந்திய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னோடியாக இருக்க மிக முக்கியமான காரணம், 10 வருடங்களுக்கு முன்பே தமிழக அரசு இத்துறை நிறுவனங்களின் உண்மையான பலத்தை புரிந்துகொண்டு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வைத்தது. இதன் விளைவாகத் தமிழ்நாட்டில் தற்போது பாக்ஸ்கான், பெகாட்ரன், டாடா எலக்ட்ரானிக்ஸ், டிக்சான் என பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அசத்தி வருகிறது.

கடந்த வாரம் தமிழ்நாடு அரசு பாக்ஸ்கான் தொழிலாளர்களுக்காகக் கட்டப்பட்டுள்ள விடுதி திறந்து வைக்கப்பட்ட நிலையில், இந்த முயற்சியை இந்தியாவே பாராட்டிய நிலையில், தற்போது டாடா குழுமம் இதேபோன்ற திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

TIDCO உடன் டாடா குழுமம் இணைந்து ஓசூரில் மெகா திட்டம்.. பாக்ஸ்கான் உடன் போட்டி..!

டாடா குழுமம் - தமிழக அரசு கூட்டு முயற்சியில் பெரும் தொழிலாளர் குடியிருப்பு திட்டத்தை ஓசூர் அருகே உள்ள நங்கமங்கலம் கிராமத்தில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களுக்காக டாடா குழுமம் மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (TIDCO) இணைந்து கட்ட உள்ளது. சுமார் ரூ.508 கோடி செலவில் அமைய உள்ள இந்த திட்டத்தில் 14 கட்டிடங்கள் அமைக்கப்பட்டு, 3000 பேருக்கு விடுதி வசதி அளிக்கப்பட உள்ளது.

இந்த திட்டம் நிறைவடைந்தால் சுமார் 18,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் விரிவாக்கத்திற்காகவும், ஓசூர் பகுதியில் தொழில் வளர்ச்சிக்கும் இந்த திட்டம் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் இந்த முயற்சி தொழில் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, தொழிலாளர்களின் நலன் கருதி மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

டாடா குழுமம் முதல் முறையாக எலக்ட்ரானிக்ஸ் துறையில் இறங்கிய போது பெரும் இலக்குடனும், பெரும் முதலீட்டு உடனும் திட்டமிட்டது. இந்த திட்டத்தைச் செயல்படுத்து தனது வரலாற்றுச் சிறப்புமிக்க அனுபவத்தைப் புரட்டிப்பார்த்த போது டைட்டன் வெற்றியில் மாபெரும் பாடத்தை கற்றது. இதன் அடிப்படையில் டாடா குழுமம் தனது டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையை ஓசூரில் அமைத்தது.

தற்போது இந்தியாவில் ஐபோன் தயாரிக்கும் ஒரே இந்திய நிறுவனம் என்றால் அது டாடா எலக்ட்ரானிக்ஸ் மட்டுமே. இதேபோல் அடிக்கடி யானைகள் உட்பட காட்டு மிருகங்கள் நடமாடும் ஒரு குட்டி காட்டு கிராமமாக இருந்த ஓசூர் அருகே அமைந்திருக்கும் திம்ஜேப்பள்ளி-யில் தான் டாடா எலக்ட்ரானிக்ஸ் தனது மாபெரும் ஐபோன் தொழிற்சாலையைச் செயல்படுத்தி வருகிறது. இந்த கிராமம் தற்போது டாடா குழுமத்தின் ஜாம்ஷெட்பூர்-க்கு இணையாக ஒப்பிடப்பட்டு உள்ளது.

டாடா குழுமம் ஓசூர் அருகில் இருக்கும் திம்ஜேப்பள்ளி-யில் தொழிற்சாலை அமைக்கத் துவங்கியது முதல் இப்பகுதியின் கலரே மாறிவிட்டது. தற்போது ஓசூரில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கும் பகுதியாகவும், முதலீட்டை ஈர்க்கும் பகுதியாகவும் உள்ளது.

"தற்போது நடத்து வரும் உள்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்ததும், நிறுவனங்கள் ஓசூரைப் பார்த்தால் அதன் உண்மையான மதிப்பும் வாய்ப்புகளும் தெரியும். ஓசூர் கிட்டத்தட்ட 2 எலக்ட்ரானிக் சிட்டிக்கு இணையானது." என அமைச்சர் டிஆர்பி ராஜா கூறினார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+