இந்தியாவின் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா குழுமம் சீனாவுக்கு இணையாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பு தளத்தை இந்தியாவில் உருவாக்கி இப்பிரிவில் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுக்க வேண்டும் என்பதற்காக பல வருடங்களுக்கு முன்பே இதற்காக திட்டமிட்டு ஓசூரில் மாபெரும் தொழிற்சாலையை உருவாக்கியது டாடா குழுமம்.
ஆரம்பமே அதிரடியாக ஆப்பிள் ஐபோனுக்கான உதிரிபாகங்களை தயாரிப்பதற்காக மாபெரும் ஆர்டரை பெற்று இந்தியாவில் டாடா - ஆப்பிள் மாபெரும் கூட்டணியை அமைத்தது. கிட்டதட்ட இந்தியாவில் அனைத்து ஆப்பிள் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் உதிரி பாகங்களை சப்ளை செய்வது டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் ஓசூர் தொழிற்சாலை தான் என்ற அளவில் இருந்தது.

எந்தவொரு தொழிலாக இருந்தாலும் ஆரம்பத்தில் சில தடுமாற்றங்கள் இருக்கும் என்பது இயல்பு தான், ஆனால் டாடா எலக்ட்ரானிக்ஸ் தனது பணிகளை துவங்கி பல மாதங்களாகியும், அசம்பிளி பணியில் இன்னும் ஆப்பிள் எதிர்பார்க்கும் தரத்தை அடைய முடியவில்லை. ஐபோனுக்கான சில பகுதியை தற்போது ஓசூர் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் அசம்பிள் செய்யப்பட்டு வருகிறது.
இப்படி அசம்பிள் செய்யப்பட்டு பகுதிகள் ஐபோனுக்குள் இறுதியாக பிட் செய்வதற்குள் குறைந்தது 2 அல்லது 3 முறை வெளிநாட்டுக்கு சென்று திரும்பி வருவதாக இதுக்குறித்து அறிந்தவர்கள் இதை தெரிவித்ததாக ஈடி தெரிவித்துள்ளது.
இது மட்டும் அல்லாமல் ஐபோன் தயாரிப்புக்கு பயன்படுத்தும் 90 சதவீத உதிரி பாகங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது தான். ஆப்பிள் தனது உற்பத்தி தளத்தை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்ற திட்டமிட்டு வரும் வேளையில் இந்தியாவில் டாடா நிறுவனம் 90 சதவீத பொருட்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது.
தற்போது டாடா எலக்ட்ரானிக்ஸ் ஓசூர் தொழிற்சாலையில் iPhone SE மாடல் போன்களின் ஒரு பகுதியை தயாரித்து வருகிறது. இதேவேளையில் ஆப்பிள் நிறுவனகத்தின் புதிய ஐபோன் மாடலான ஐபோன் 15-னின் உதிரிபாகங்களின் இணைத்து ஒரு பகுதியை அசம்பிளி-ஐ ஓசூர் தொழிற்சாலையில் அமைக்கப்பட்ட உள்ளது.
இந்தியாவில் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி கூட்டணியான பாக்ஸ்கான், பெகாட்ரன், விஸ்திரான் போன்ற நிறுவனங்கள் மட்டுமே ஐபோன்-ஐ முழுமையாக தயாரிக்கிறது. டாடா ஐபோனின் ஒரு பகுதியை மட்டுமே தயாரிக்கிறது.

2023 ஆம் நிதியாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் சுமார் 5 சதவீதத்தை இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து சுமார் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐபோன்களை ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் ஏற்றுமதி மதிப்பு 4 மடங்கு அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications