தமிழகத்தின் ஓசூர் திம்ஜேப்பள்ளி மற்றும் ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர் இரண்டும் சுமார் 2000 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், இந்த இரண்டு நகரங்களையும் ஒரேயொரு ஒற்றுமையால் இணைக்கப்பட்டுள்ளன. அதுதான் டாடா குழுமம். என்ன குழப்பமாக இருக்கிறதா..? எப்படி ஓசூர் திம்ஜேப்பள்ளி கிராமமும், ஜாம்ஷெட்பூர்-ம் ஒன்றாகும்..? டாடா குழுமத்திற்கும் ஓசூர் திம்ஜேப்பள்ளி கிராமத்திற்கும் என்ன தொடர்பு..?
இந்தியாவில் முதல் திட்டமிடப்பட்ட தொழில் நகரம் என்றால் அது, ஜாம்ஷெட்பூர் தான் இது டாடா குழுமத்தால் நிர்வாகம் செய்யப்படும் சிறப்பான தொழில் நகரமாகும். ஜாம்ஷெட்பூர் நகரத்தை டாடா கையில் எடுக்கும் வரையில் இது ஒரு தூங்கும் கிராமமாக தான் இருந்தது.

இதேபோல் அடிக்கடி யானைகள் உட்பட காட்டு மிருகங்கள் நடமாடும் ஒரு குட்டி காட்டு கிராமமாக இருந்தது தான் ஓசூர் அருகில் இருக்கும் திம்ஜேப்பள்ளி. தற்போது திம்ஜேப்பள்ளி-யில் தான் டாடா எலக்ட்ரானிக்ஸ் தனது மாபெரும் ஐபோன் தொழிற்சாலையைச் செயல்படுத்தி வருகிறது. இதுதான் இரு கிராமங்களுக்கும் டாடா குழுமத்திற்கும் இடையிலான உறவு.
டாடா குழுமம் ஓசூர் அருகில் இருக்கும் திம்ஜேப்பள்ளி-யில் தொழிற்சாலை அமைக்க துவங்கியது முதல் இப்பகுதியின் கலரே மாறிவிட்டது. தற்போது ஓசூரில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கும் பகுதியாகவும், முதலீட்டை ஈர்க்கும் பகுதியாகவும் உள்ளது.
"ஜாம்ஷெட்பூர்-க்கு ஒரு சிறந்த வரலாறு உள்ளது, இதேபோல் ஓசூர் ஜாம்ஷெட்பூர் பிளஸ் ஆக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூறினார். "டாடா தொழிற்சாலையைச் சுற்றி ஏராளமான உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், ஜாம்ஷெட்பூர் உடன் ஒப்பிடுவது இயல்பான ஒரு விஷயம், ஆனால் நாங்கள் திம்ஜேப்பள்ளி-யில் ஸ்டீல் போன்ற ஒரு குறிப்பிட்ட துறையைப் பார்க்கவில்லை, பல தரப்பட்ட உற்பத்தித் துறையில் இருந்து முதலீட்டை ஈர்க்க திட்டமிட்டு உள்ளோம்." என தெரிவித்தார் அமைச்சர் டிஆர்பி ராஜா.

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள திறமையைக் கருத்தில் கொண்டு, ஓசூர் முக்கிய ஐடி ஹப் ஆக மாற வேண்டும் என திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாக ஓசூர்-பெங்களூருக்கு 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் பெங்களூரில் நடத்த மேஜிக் ஓசூரிலும் நடக்க வாய்ப்பு அதிகமாக உள்ளது.
"தற்போது நடத்து வரும் உள்கட்டமைப்பு பணிகள் முடிவடைந்ததும், நிறுவனங்கள் ஓசூரைப் பார்த்தால் அதன் உண்மையான மதிப்பும் வாய்ப்புகளும் தெரியும். ஓசூர் கிட்டத்தட்ட 2 எலக்ட்ரானிக் சிட்டிக்கு இணையானது." என்று அமைச்சர் டிஆர்பி ராஜா கூறினார்.
இதேபோல் ஓசூர் தொழில்துறைக்கு அன்னியமாக இல்லை, டிவிஎஸ், டைட்டன், அசோக் லேலேண்ட், ஏதர், ஒலா மற்றும் பிற நிறுவனங்களின் பிரிவுகள் இங்கு உள்ளன. ஓசூரில் விமான நிலையம் அறிவிக்கப்பட்டிருப்பது தொழில்துறை மையத்திற்கு மற்றொரு ஊக்கமாகப் பார்க்கப்படுகிறது. இதேவேளையில் டாடா குழுமம் உள்ளூர் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை மறுக்க முடியாது.
"டாடா எலக்ட்ரானிக்ஸ் ஓசூரில் சில உயர்நிலை வேலைவாய்ப்புகளைக் கொண்டுவரும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும்" என்று அமைச்சர் டிஆர்பி ராஜா கூறினார்.
ஓ.பி.ஜின்டால் குளோபல் பல்கலைக்கழக பேராசிரியர் அருப் கே சாட்டர்ஜி கூறுகையில், இரண்டு தொழில்துறை நகரங்களுக்கும் இடையே ஒற்றுமைகள் இருப்பதை ஒப்புக்கொண்டார்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications