டைட்டன் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்.. டாடா குழுமம் எடுத்த முக்கிய முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய பங்குச்சந்தையில் கடந்த 3 வருடத்தில் முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான லாபத்தைக் கொண்டு முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் டைட்டன் நிறுவனத்தில் முக்கியமான வர்த்தக விரிவாக்கத் திட்டத்தை டாடா நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

இந்த அறிவிப்பு மூலம் டைட்டன் நிறுவனத்தின் வர்த்தகம், வருமானம், லாபம் ஆகியவை புதிய உச்சத்தை அடைய வாய்ப்புகள் உள்ளதால் டைட்டன் நிறுவனத்தில் இதுவரை முதலீடு செய்துள்ளவர்களும், ஏற்கனவே முதலீடு செய்துள்ளவர்களும் கவனிக்க வேண்டும்.

டைட்டன் நிறுவனத்தின் வர்த்தக மாடல் உங்களுக்குத் தெரியுமா..? எந்தப் பிரிவில் இருந்து எவ்வளவு வருமானம் வருகிறது..?

டைட்டன் நிறுவனத்தின் மாபெரும் ஆதிக்கம்.. அசத்தும் தமிழ்நாடு அரசு..!டைட்டன் நிறுவனத்தின் மாபெரும் ஆதிக்கம்.. அசத்தும் தமிழ்நாடு அரசு..!

டாடா குழுமம்

டாடா குழுமம்

டாடா குழுமத்தின் மிக முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் டைட்டன் நிறுவனம் தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் மொத்த வருவாயில் 90 சதவீதம் நகை விற்பனையின் வாயிலாக மட்டுமே பெறுகிறது. மீதமுள்ள 10 சதவீதம் தான் வாட்ச், மூக்கு கண்ணாடி மற்றும் சென்ட் ஆகியவற்றின் மூலம் பெறுகிறது.

 டைட்டன் நிறுவனம்

டைட்டன் நிறுவனம்

டைட்டன் நிறுவனத்தின் நகை பிரிவின் குடையின் கீழ் 4 முக்கியப் பிராண்டுகள் உள்ளது. தனிஷ்க் இதுதான் பிளாக்ஷிப் பிராண்ட், Mia பிராண்டு இது வேலை செய்யும் பெண்களைக் குறிவைத்து இயங்கக் கூடியவை, Caratlane ஆன்லைன் தங்க நகை விற்பனை, கடைசியாக Zoya பிராண்டு - இதில் பணக்காரர்களை மட்டும் குறிவைத்து அவர்களுக்கான நகைகள், பிரத்தியேக டிசைன்களை உருவாக்கி வர்த்தகம் செய்யும் பிராண்டு.

Zoya பிராண்டு
 

Zoya பிராண்டு


இந்தியாவில் பணக்காரர்கள் எண்ணிக்கை வேமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் டாடா குழுமம் Zoya பிராண்ட் கடைகளை 2027 ஆம் ஆண்டுக்குள் 4 மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

ஆடம்பர நகை பிரிவு

ஆடம்பர நகை பிரிவு

இது டைட்டன் நிறுவனத்தின் வர்த்தக மாடலை பெரிய அளவில் மாற்றுவது மட்டும் அல்லாமல் வருவாய் அளவு பெரிய அளவில் அதிகரிக்கும். ஏற்கனவே இந்தியாவில் ஆடம்பர நகை பிராண்டான tiffany and co கடைகளைத் திறந்த நிலையில், Zoya புதிய போட்டியை இப்பிரிவில் உருவாக்கும்.

250 கோடி ரூபாய் சொத்து

250 கோடி ரூபாய் சொத்து

2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் அதாவது 30 மில்லியன் டாலர் அல்லது 250 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வைத்துள்ளவர்கள் எண்ணிக்கை 11 சதவீதம் அதிகரித்துள்ளது.

பணக்காரர்கள்

பணக்காரர்கள்

புதிய வர்த்தக வாய்ப்பு, ஸ்டார்ட்அப், டெக் நிறுவனங்கள் எழுச்சி மூலம் இந்தியாவில் UHNWI பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என க்னைட் பிராங்க் ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்தியா

இந்தியா

தற்போது உலகளவில் இந்தியா தான் தங்கம், நகைகள் அதிகம் வாங்கும் நாடாக உள்ளது, இந்தப் பழக்க வழக்கத்தில் எவ்விதமான மாற்றமும் இருக்கப்போவது இல்லை என்பதால் டைட்டன் நிறுவனத்தின் நகை விற்பனை பிரிவின் 4 பிராண்டுகளுக்கும் எதிர்காலம் அற்புதமாக உள்ளது. குறிப்பாக Zoya பிராண்டுக்கு நிறையவே உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TATA group plans to increase 4 times its ZOYA stores under Titan company

TATA group plans to increase 4 times its ZOYA stores under Titan company
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X