சந்திரசேகரன் Vs நோயல் டாடா: TATA குழுமத்தில் நடக்கும் மினி தேர்தல்.. இப்போ தெரியும் யார் யார் எந்த பக்கம்ன்னு!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாகத் திகழும் டாடா குழுமத்தில் அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வெடித்து வருகிறது, சமீபத்தில் சந்திரசேகரனின் மனைவி மற்றும் மகன் தலைமையிலான நிறுவனத்திற்கும், டாடா சன்ஸ் நிர்வாக குழுவில் இருக்கும் டிவிஎஸ் நிறுவனத் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கும் மத்தியிலான வர்த்தக தொடர்பு குறித்து டாடா சன்ஸ் நிர்வாகத்திற்கு எவ்விதமான தகவலும் சமர்ப்பிக்காதது குறித்து பெரும் பிரச்சனை வெடித்தது.

இந்த நிலையில் அடுத்த நடக்கும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் இந்நிறுவனத்தின் பங்குகளை வைத்திருக்கும் டாடா நிறுவனங்கள் சந்திரசேகரனின் 5 ஆண்டு சேர்மன் நியமனத்தைச் சாத்தியப்படுத்த வேண்டுமாயின் முதலில் டாடா சன்ஸ் நிர்வாக குழுவின் டைரெக்டராக நியமிக்க வேண்டும்.

சந்திரசேகரன் Vs நோயல் டாடா: TATA குழுமத்தில் நடக்கும் மினி தேர்தல்.. இப்போ தெரியும் யார் யார் எந்த பக்கம்ன்னு!

இதற்கு டாடா சன்ஸ் பங்கு உரிமையாளர்கள் வாக்கு அளிக்கப்பட வேண்டும். இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் தான் சந்திரசேகரன் பதவி தொடருமா நீடிக்குமா என்பதை முடிவு செய்வதைத் தாண்டி டாடா குழும நிறுவனங்களின் தலைவர்கள் நோயல் டாடா பக்கம் சாய்கிறார்களா அல்லது என்.சந்திரசேகரன் பக்கம் சாய்கிறார்களா என்பது வெளிப்படையாகத் தெரிய வரும்.

இது டாடா டிரஸ்ட் - டாடா சன்ஸ் நிர்வாக குழுக்கு மத்தியில் இருக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றும் தேர்தலாகவே பார்க்கப்படுகிறது.

டாடா சன்ஸ் நிறுவனத்தில் சுமார் 10 டாடா குழும நிறுவனங்கள் இணைந்து 12.86 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இதில் முக்கியமாக டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி, டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ், டாடா பவர், டாடா கெமிக்கல்ஸ் என 10 நிறுவனங்கள் அடித்த டாடா சன்ஸ் AGM கூட்டத்தில் சந்திரசேகரனின் நியமனம் குறித்து வாக்கு அளிக்க வேண்டும்.

சந்திரசேகரன் டாடா சன்ஸ் சேர்மன் ஆக தொடர வேண்டுமென்றால் அவர் டாடா சன்ஸ் நிர்வாக குழுவில் டைரெக்டராக முதலில் சேர்க்கப்பட வேண்டும். இதற்கு டாடா சன்ஸ் பங்குதாரர்கள் தயவு தேவை.

இதனால் டாடா குழும நிறுவனங்கள் எத்தகைய முடிவை எடுப்பார்கள் என்பது தற்போது முக்கியமான கேள்வியாக உள்ளது, இதில் சில எந்த பக்கமும் வாக்கு அளிக்கவில்லை என முடிவு எடுத்தாலும் பிரச்சனை உருவாகும். டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த பொதுக் கூட்டம் எப்போது என்பதை இதுவரையில் முடிவு செய்யப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+