இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் டாடா குழுமம் சந்திரசேகரன் தலைமையில் மிகப்பெரிய அளவிலும் வேகமாகவும் வளர்ச்சி அடைந்து வருகிறது.
குறிப்பாக சந்திரசேகரன் தலைமையிலான டாடா குழுமம் தற்போது ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் வர்த்தகத்தில் அதிகளவில் கவனம் செலுத்தி வரும் வேளையில் டாடாவின் வளர்ச்சி புதிய உச்சத்தை அடைய உள்ளது, சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த வருடம் அதிகப்படியான பங்கு மதிப்பில் வளர்ச்சியைப் பதிவு செய்த முன்னணி நிறுவனங்களில் டாடா குழும நிறுவனங்களில் பல இடம்பெற்று இருந்தது.
இதன் மூலம் முதலீட்டாளர்கள் மத்தியிலும் டாடா குழுமம் அதிகப்படியான கவனத்தைப் பெற்று வரும் நிலையில் சந்திரசேகரன் தான் இலக்காகக் கொண்டு இருக்கும் 4 துறைகளை அறிவித்துள்ளார்.
என்.சந்திரசேகரன்
டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமாகவும், தாய் நிறுவனமாகவும் விளங்கும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான என்.சந்திரசேகரன் நேற்று தனது ஊழியர்களுக்கு அளித்த புத்தாண்டு செய்தியில் பல முக்கியமான தகவல்களைத் தெரிவித்துள்ளார், இதில் முதலீட்டாளர்களுக்கு, சக போட்டி நிறுவனங்களுக்கும் முக்கியமானதாக விளங்கியது சந்திரசேகரன் முக்கிய இலக்காகக் கொண்டு இருக்கும் 4 துறைகள் தான்.
டாடா குழுமம்
சந்திரசேகரன் டாடா குழும ஊழியர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் டிஜிட்டல், நியூ எனர்ஜி, சப்ளை செயின், ஹெல்த் ஆகியவை தான் முக்கியமான இலக்காக நிர்ணயம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
5G முதல் TataNeu
இந்த 4 துறையிலும் பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்ய ஏற்கனவே பல புதிய திட்டங்களை 5G முதல் TataNeu, Tata electronics சோதனை செய்யப்பட்டு வருகிறது. இது நிறுவனத்தின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தும் எனச் சந்திரசேகரன் டாடா ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
3 டிரில்லியன் டாலர்
ஒரு நிறுவனமாக இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் நம்முடைய கடமையைச் செய்ய வேண்டும், இதன் மூலம் 2024ஆம் ஆண்டுக்குள் இந்தியா 3 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாற்றும் இலக்கை அடைவோம் எனத் தெரிவித்துள்ளார்.
ஐஎம்எப்
மேலும் சந்திரசேகரன் ஐஎம்எப் அமைப்பு சர்வதேச பொருளாதாரத்தின் சராசரி வளர்ச்சி அளவீடு 4.9 சதவீதமாக அறிவித்துள்ள நிலையில், இந்தியாவின் வளர்ச்சி அளவீடு 8.5 சதவீதமாக உள்ளது என்பதையும் சந்திரசேகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications