முதலீடு என்பது வருங்காலத்தின் கனவு. நம்முடைய முதலீடு என்பது ஆலமரத்தின் விழுது போல் தழைத்தோங்கி, வருங்காலத்தில் நம்மைத் தாங்கி பிடிக்க வேண்டும். ஆனால் சில சமயங்களில் முதலீடு நம்மை முட்டாளாக்கி காற்றில் கரைந்து விடுகின்றது.
எனவே ஒரு முதலீட்டைத் தேர்ந்தெடுக்கும் பொழுது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். சில சமயங்களில் வரலாறு நமக்கு மிகச் சிறந்த முதலீட்டுப் பாடத்தைக் கற்றுக்கொடுக்கிறது.
அத்தகைய ஒரு சிறந்த முதலீடுகளில் ஒன்றாக டைட்டன் நிறுவனப் பங்குகள் வரலாற்றில் சிறந்த பங்கு முதலீடாகக் காணப்படுகின்றது. ஏன் தெரியுமா..? உங்களுடைய 1 லட்சம் ரூபாய் முதலீடு 12.55 கோடி ரூபாயாக மாற்றியுள்ளது டைட்டன் பங்குகள் அதுவும் வெறும் 14 வருடத்தில். எப்படி..?
போனஸ் பங்குகள், மற்றும் பங்குப் பிரிப்பு
டைட்டன் நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஒரு வருடமாகத் தன்னுடைய அடிப்படையை வலுவாகக் கட்டமைத்து வருகின்றது. கடந்த ஆண்டு ஜூலை முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் டாடா குழுமப் பங்குகள் சில, நல்ல வருமானத்தைத் தன்னுடைய முதலீட்டாளர்களுக்கு அளித்தன.
டைட்டன் நிறுவனப் பங்குகள்
ஆனால், டைட்டன் நிறுவனப் பங்குகளின் போக்கு இதற்கு எதிர் திசையில் இருந்தது. இந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை சரிவு பாதையை நோக்கி நகரத் தொடங்கியது. இதனால் குறுகிய கால முதலீட்டாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். அனால் நீண்ட கால முதலீட்டாளர்கள் இதைப் பற்றிச் சிறிதும் கவலைப் படவில்லை.
14 ஆண்டுகளுக்கு முன்
கடந்த 14 ஆண்டுகளில் Titan நிறுவன பங்கின் விலை ₹40 முதல் ₹2,510 வரை உயர்ந்துள்ளதால் நீண்ட கால நோக்கில் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் அதிகம் கவலைப்படாமல் இருக்கின்றார்கள். 2011 க்குப் பிறகு டைட்டன் நிறுவன பங்குகளை வாங்கியவர்கள், அந்த நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட ஈவுத்தொகையின் கூடுதல் பலனைப் பெற்றிருக்கலாம்.
பங்கு பிரித்தல் மற்றும் போனஸ் ஷேர்
ஆனால் 2011 க்கு முன் இந்த டாடா நிறுவனப் பங்கை வாங்கியவர்களுக்கு, அந்த நிறுவனத்தில் அறிவிக்கப்பட்ட பங்கு பிரித்தல் மற்றும் போனஸ் ஷேர் வழங்கப்பட்டதன் பலன் கண்டிப்பாகக் கிடைத்திருக்கும்.
போனஸ் ஷேர்
டைட்டன் நிறுவன பங்கு விலை வரலாற்றின்படி, இந்த டாடா குழும நிறுவனம் 23 ஜூன் 2011 அன்று போனஸ் பங்குகளை 1:1 விகிதத்தில் வழங்குவதாக அறிவித்தது. இதன் காரணமாக இந்தக் நிறுவனத்தின் ஒரு பங்கை வைத்திருப்பவர்களுக்குக் கூடுதலாக மற்றொரு பங்கு வழங்கப்பட்டது.
பங்கு பிரித்தல்
அதேபோல், டாடா குழுமப் பங்குகள் 1:10 விகிதத்தில் பங்குகளின் துணைப் பிரிவுக்காகப் பிரித்தெடுக்கப்பட்டது. அதாவது, 1 டைட்டன் நிறுவனப் பங்குகள் 10 பங்குகளாகப் பிரிக்கப்ப்பட்டது. இதன் காரணமாக டைட்டன் நிறுவனத்தின் பங்குகளை வைத்திருந்த நபரின் பங்குகள் போனஸ் மற்றும் பங்கு பிரிப்புக்குப் பின்னர்ப் பல மடங்கு அதிகரித்தது.
லாபத்தில் எதிரொலி
ஒரு முதலீட்டாளர் 14 ஆண்டுகளுக்கு முன்பு டைட்டன் நிறுவனத்தின் பங்குகளில் சுமார் ₹1 லட்சத்தை முதலீடு செய்திருந்தார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அன்றைய தேதியில் டைட்டன் நிறுவன பங்குகள் ஒவ்வொன்றும் ₹40 என்கிற அளவில் வர்த்தகமாகிக் கொண்டிருந்தது.
2500 டூ 50000 பங்குள்
vஇதன் காரணமாக அந்த முதலீட்டாளருக்கு சுமார் 2,500 பங்குகள் கிடைத்திருக்கும். 1:1 போனஸ் பங்கு வழங்கும் நிகழ்விற்குப் பிறகு, அவரின் பங்கு இரட்டிப்பாகி அவரிடம் சுமார் 5000 பங்குகள் இருந்திருக்கும். 1:10 என்கிற விகிதத்தில் நிகழ்ந்த பங்கு பிரிப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு இந்த 5,000 டைட்டன் பங்குகள் 50,000 பங்குகளாக மாறி இருக்கும்.
₹1 லட்சம் என்பது ₹12.55 கோடியாக மாறிய கதை
இன்றைய தேதியில் NSEயில் டைட்டன் நிறுவன பங்கின் விலை ₹2,510 ஆக இருக்கின்றது. எனவே அந்த முதலீட்டாளர் கடந்த 14 ஆண்டுகளாக்கு முன்னர் இந்த டாடா குழுமப் பங்குகளில் முதலீடு செய்திருந்தால், அவரின் ₹1 லட்சத்தின் முழுமையான மதிப்பு இன்று ₹12.55 கோடியாக (₹2,510 x 2,500 x 2 x 10) மாறியிருக்கும்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!



Click it and Unblock the Notifications