உப்பு முதல் சாப்ட்வேர் வரையிலான பல்வேறு வணிகங்களில் டாடா குழுமம் கொடி கட்டி பறக்கிறது. டாடா குழுமம் 2008ம் ஆண்டில் டாடா கம்யூனிகேஷன்ஸ் பேமெண்ட் சொல்யூஷன்ஸ் என்ற நிதி சேவைகள் நிறுவனத்தை தொடங்கியது. இது டாடா கம்யூனிகேஷன்ஸின் 100 சதவீத துணை நிறுவனமாகும். இந்நிறுவனம் 2013ல் நாட்டின் முதன் முதலில் ஒயிட் லேபிள் நெட்வொர்க்கை நடைமுறைப்படுத்தியது.
இந்நிறுவனம் இண்டிகேஷ் பிராண்டின் கீழ் ஏடிஎம்களை நடத்தி வருகிறது. தற்போது இந்தியாவின் முன்னணி ஒயிட் லேபிள் ஏடிஎம் ஆபரேட்டர்களில் ஒன்றாக உள்ளது. ஒயிட் லேபிள் ஏடிஎம் என்பது வங்கி அல்லாத நிறுவனத்துக்கு சொந்தமான மற்றும் அதனால் இயக்கப்படும் ஒரு பண விநியோக இயந்திரமாகும்.

டாடா குழுமம் தற்போது ஏடிஎம் வணிகத்தில் இருந்து வெளியேற முடிவு செய்தது. இதனையடுத்து டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தனது துணை நிறுவனமான டாடா கம்யூனிகேஷன்ஸ் பேமெண்ட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை ஆஸ்திரேலியாவை சேர்ந்த நிதிதொழில்நுட்ப நிறுவனமான பைண்டியின் இந்திய துணை நிறுவனமான டிரான்ஸாக்ஷன் சொல்யூஷன்ஸ் இன்டர்நேஷனல் (டிஎஸ்ஐ) நிறுவனத்துக்கு விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடத்தியது.
இரு தரப்புக்கும் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து 2024 நவம்பரில் இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. இந்த விற்பனை ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.330 கோடி மற்றும் பரிமாற்ற விகித சரிசெய்தல்களின் அடிப்படையில் கூடுதலாக ரூ.75 கோடி செலவாகும்.
இதனையடுத்து, டிஎஸ்ஐ நிறுவனத்துக்கு டாடா கம்யூனிகேஷன்ஸ் பேமெண்ட் சொல்யூஷன்ஸ் பங்குகளை விற்பனை செய்வதற்கு ஒப்புதல் வேண்டி ரிசர்வ் வங்கியிடம் டாடா கம்யூனிகேஷன்ஸ் விண்ணப்பம் செய்து இருந்தது. தற்போது, டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இதனையடுத்து டாடா கம்யூனிகேஷன்ஸ் பேமெண்ட் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தை விரைவில் டிஎஸ்ஐ நிறுவனம் கையகப்படுத்தும். இதன் மூலம், இந்திய நிதி சேவை துறையில் பைண்டியின் இருப்பு விரிவடையும். இந்நிறுவனம் தற்போது இந்தியாவில், எஸ்பிஐ உள்ளிட்ட 12 வங்கிகளுடன் இணைந்து 7,500க்கும் மேற்பட்ட பிரவுன் லேபிள் ஏடிஎம்களை இயக்கி வருகிறது.
டாடா நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு, 4,600க்கும் மேற்பட்ட இண்டிகேஷ் ஏடிஎம்களை ஒருங்கிணைக்கும் மற்றும் கூடுதலாக சுமார் 3,000 ஏடிஎம்களை டிஎஸ்ஐ அணுகும். இதனையடுத்து அந்நிறுவனத்தின் மொத்த நெட்வொர்க் பல்வேறு பிரிவுகளில் 12,000 ஏடிஎம்களுக்கு மேல் உயர்த்தும். இதன் மூலம் ஆசியாவின் மிகப்பெரிய ஏடிஎம் ஆபரேட்டர்களில் ஒன்று என்ற அந்தஸ்தை டிஎஸ்ஐ பெறும்.
Story wirtten by: Subramanian
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications