தேஜாஸ் நெட்வொர்க்ஸ் லிமிடெட் பங்குகள் கடந்த மூன்று ஆண்டுகளில் மல்டிபேக்கர்களாக மாறியது. இந்த டாடா குரூப் பங்கு 2020 ஆகஸ்ட் 25 ஆம் தேதி ரூ.64.95 ஆக இருந்தது. 2023 ஆகஸ்ட் 25 ஆம் தேதி ரூ.847.20 ஆக முடிவடைந்தது.
இந்த மூன்று ஆண்டுகளில் 1204 சதவீத வருவாயைத் தந்துள்ளது. இரண்டாம் ஆண்டில் 133.55 சதவீதமும், ஓராண்டில் 61.17 சதவீதமும் தலா உயர்ந்தது. சென்செக்ஸ் 67.04 சதவீதம் மூன்று ஆண்டுகளில் உயர்ந்தது. ஆப்டிகல் மற்றும் டேட்டா நெட்வொர்க்கிங் புராடக்ட்ஸ் பங்கானது ஜனவரி 1 2023இல் ரூ.510.05 ஆக இருந்தது. பின்னர் வரலாற்று உச்சமாக ஜூலை 20 2023இல் ரூ.893க்கு உயர்ந்தது.

கடைசி வர்த்தகத்தில் தேஜாஸ் நெட்வொர்க்ஸ் பங்குகள் 0.73 சதவீதம் உயர்ந்து ரூ.847.20 ஐ எட்டியது. பம்பாய் பங்கு சந்தையில் இதற்கு முந்தைய முடிவில் ரூ.841.10 ஆக இருந்தது. இந்த நிறுவனத்தில் மொத்தம் 0.34 லட்சம் பங்குகள் பம்பாய் பங்குச் சந்தையில் ரூ.2.88 கோடி விற்றுமுதலை தந்தது. டாடா குரூப் நிறுவனத்தின் மார்க்கெட் கேப் ரூ.14,370 கோடியானது.
டெக்னிக்கலாக சொல்ல வேண்டுமென்றால் தேஜாஸ் நெட்வொர்க்ஸின் ரிலேடிவ் ஸ்ட்ரெங்க்த் இண்டெக்ஸ் 59.3இல் உள்ளது. அதன் வோலடாலிட்டி 1.1.இன் பீட்டாவாக இருந்தது. இது அந்த ஆண்டின் சராசரி வோலடாலிட்டியாகும்.
தேஜாஸ் நெட்வொர்க்ஸ் பங்குகள் 5 நாள், 10 நாள், 20 நாள், 50 நாள் மற்றும் 200 நாள் டிரேடிங்கில் அதிகமாக இருந்தது. டாடா குரூப் நிறுவனம் ஜூன் 2023 காலாண்டில் ரூ.26.29 கோடி நஷ்டம் என்று கூறியுள்ளது. இது முந்தைய ஆண்டை ஒப்பிட்டால் ரூ.6.64 கோடி நஷ்டமாக இருந்தது.
இருப்பினும் அதன் வருவாய் 43.56 சதவீதம் உயர்ந்து ரூ.207.37 ஆக நடப்பு நிதியாண்டில் இருந்தது. கடந்த நிதியாண்டில் ரூ.144.445 கோடியாக இருந்தது. தேஜாஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 2021 டிசம்பரில் இருந்து சிறப்பாக இல்லை. கடந்த 7 காலாண்டுகளில் 6இல் நஷ்டத்தை அடைந்தது.
இதுபற்றி InCred Equities துணைத்தலைவர் கௌரவ் பிஸ்ஸா கூறுகையில், தேஜாஸ் நெட்வொர்க்ஸ் பங்கு 2020 ஆம் ஆண்டில் இருந்து ரூ.40 அளவில் இருந்து தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே இருக்கிறது.
வார அட்டவணையில் உயர் அதிகரிப்பும் உயர் குறைவும் காணுவதால் அதன் டிரெண்டு வலுவாக உள்ளதைக் காட்டுகிறது. இந்த பங்கு அண்மைக்காலத்தில் புதிய உச்சங்களை தொடுகிறது. இந்த பங்கை ரூ.920க்கு வாங்கலாம் என்றார்.
Technical Research, Prabhudas Lilladher துணைத்தலைவர் வைஷாலி பரேக் கூறுகையில், இந்த பங்கு ஒட்டுமொத்தத்தில் வலுவான டிரேண்டிங்கில் உள்ளது. ரூ.850 அளவில் நிலைப்பதால் ரூ.880 அளவில் உயர்ந்து 922ஐ எட்ட வாய்ப்புள்ளது என்றார்.
Progressive Shares இயக்குநர் ஆதித்யா காகர் கூறுகையில், டாடா குரூப்பின் தேஜாஸ் நெட்வொர்க்ஸ் பிரைமரி அப்டிரெண்டில் உயர் டாப் உயர் பாட்டமில் உள்ளது. 8 மாதங்களாக நிலையாகி தொடர்ந்து அதிகரித்து ரவுண்டிங் பாட்டம் பார்மேஷேனில் வருகிறது.
தற்போதும் இந்த பங்கு வேறொரு பாட்டர்னான பென்னன்ட் அண்டு போல் பார்மேஷனில் உள்ளது. டிரெண்ட் ஃபாலோயிங் இண்டிகேட்டர் ADX வலுவான அப்டிரெண்ட் இருப்பதை தெரிவிக்கிறது. ரவுண்டிங் பாட்டம் பாட்டர்னை வைத்துப் பார்த்தால் அதன் இலக்கு ரூ.1025 ஆகும் என்றார்.
தேஜாஸ் நெட்வொர்க்ஸ் ஆப்டிகல் மற்றும் நெட்வொர்க்கிங் தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது. டிசைன்கள், வளர்ச்சி, அதிக விற்பனை, டெலிகம்யூனிகேஷன் சர்வீஸ் நிறுவனங்கள், ராணுவம் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு போட்டியான விலையை தருகிறது. 75 நாடுகளில் செயல்படுகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications