மும்பை: மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் செயல்பட்டு வரக்கூடிய பிரீச் கேண்டி (Breach Candy Hospital) மருத்துவமனையை 500 கோடி ரூபாய் கொடுத்து டாடா குழுமம் கையகப்படுத்தியுள்ளது. ரத்தன் டாடா தன்னுடைய இறுதி நிமிடங்களை இந்த மருத்துவமனையில் தான் கழித்தார்.
தெற்கு மும்பையில் செயல்பட்டு வரக்கூடிய பிரீச் கேண்டி மருத்துவமனையின் கட்டுப்பாடு முழுவதுமாக டாடா குழுமத்தின் கைகளில் வந்துள்ளது. இந்த மருத்துவமனையின் வாரிய குழு உறுப்பினர்கள் உறுப்பினர்களில் டாடா குழுமத்தை சேர்ந்த 3 பிரதிநிதிகள் சேர்க்கப்பட உள்ளனர். டாடா சன்ஸ் தலைவரான சந்திரசேகரன் பிரீச் கேண்டி மருத்துவமனை அறக்கட்டளையின் தலைவராக வரும் அக்டோபர் 1ஆம் தேதி பொறுப்பேற்க இருக்கிறார் .

தொடர்ந்து இந்த மருத்துவமனை பிரீச் கேண்டி டாடா சன்ஸ் அசோசியேட்ஸ் என்ற பெயரில் அழைக்கப்பட உள்ளது. டாடா குழுமம் இந்த மருத்துவமனையின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி நவீன தொழில்நுட்பங்களை கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. டாடா குழுமத்தை பொறுத்தவரை தற்போது மும்பையில் மூன்று மருத்துவமனைகள் அதன் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருக்கின்றன.
பரேல் பகுதியில் செயல்பட்டு வரக்கூடிய டாடா மெமோரியல் சென்டர் புற்றுநோய் சிகிச்சை மையமாக இயங்கி வருகிறது. அதே போல மகாலட்சுமி பகுதியில் விலங்குகளுக்கான மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் மூன்றாவதாக பிரீச் கேண்டி மருத்துவமனை டாடா குழுமத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருக்கிறது.
1946 ஆம் ஆண்டு ஐரோப்பிய மருத்துவமனை அறக்கட்டளையால் மும்பையில் நிறுவப்பட்டது தான் பிரீச் கேண்டி மருத்துவமனை. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாகவே யூனிலீவர், கிராம்ப்டன் கிரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் இணைந்து நிதியை கொண்டு வந்து பிரீச் கேண்டி மருத்துவமனையை அமைத்தார்கள். பிரிட்டன் கட்டிடக்கலை வல்லுநர் கிளாட் பிலாட்லி அவர்களால் 25 படுக்கைகள் கொண்ட ஒரு சிறிய மருத்துவமனையாக தான் இது தொடங்கப்பட்டது.
பின்னாளில் இது இந்திய நிறுவனங்கள் மற்றும் இந்திய அறக்கட்டளைகள் சட்டத்தின் கீழ் பிரீச் கேண்டி மருத்துவமனை அறக்கட்டளை என்ற பெயரில் இணைக்கப்பட்டு மிகப்பெரிய மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இந்த மருத்துவமனையில் இந்தியாவின் பல்வேறு பிரபலங்களும் சிகிச்சை பெற்று இருக்கிறார்கள். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தன்னுடைய மூட்டு அறுவை சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பிரபல நடிகர் அமிதாபச்சன் 1982 ஆம் ஆண்டு கூலி திரைப்படத்தில் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயங்களுக்கு இங்கு தான் சிகிச்சை பெற்றுக் கொண்டார். ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனர் திருபாய் அம்பானி தன்னுடைய இறுதி நாட்களை இந்த மருத்துவமனையில் தான் கழித்தார். கடந்த ஆண்டு ரத்தன் டாடா இந்த மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்ட தன்னுடைய இறுதி சுவாசத்தை சுவாசித்தார். ரத்தன் டாடாவை பொறுத்தவரை தன்னுடைய டாடா அறக்கட்டளைகள் வாயிலாக பிரீச் கேண்டி மருத்துவமனையின் மேம்பாட்டுக்காக பல்வேறு நிதி உதவிகளை செய்திருக்கிறார்.
மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா , கோத்ரேஜ் குழுமத்தின் தலைவர் ஜான்சைட் கோத்ரேஜ், பாலோஞ்சி குழுமத்தின் மெஹ்லி மிஸ்திரி , ஹிந்துஸ்தான் யுனிவலிவர் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரோகித் ஜமா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இந்த மருத்துவமனை அறக்கட்டளையின் அறங்காவலர்களாக இருக்கின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications