இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா குழுமம், அதன் நுகர்வோர் பிரிவு மூலம் இந்தியாவின் பிரபல ஸ்னாக்ஸ் மற்றும் தின்பண்டங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹல்திராம் (Haldiram's) நிறுவனத்தில் 51 சதவீத பங்குகளை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஆனால், இதில் ஒரு பிரச்சனை வந்துள்ளது, Haldiram's நிர்வாகம் தனது நிறுவனத்தின் மதிப்பீட்டை 10 பில்லியன் டாலராக மதிப்பீட்டு உள்ளது. அதாவது கிட்டதட்ட 82000 கோடி ரூபாய்க்கு மதிப்பிட்டு உள்ளது, இந்த அதிகப்படியான விலையில் வாங்குவதற்கு டாடா குழுமம் விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோன்று தான் பிஸ்லரி நிறுவனத்தை டாடா குழுமம் வாங்க திட்டமிட்ட போது, அதிகப்படியான மதிப்பீடு காரணமாக இதை வாங்கும் திட்டத்தில் கடைசி நேரத்தில் பின்வாங்கியது. இதன் பின்பு பிஸ்லரி நிறுவனத்தின் நிறுவனர் ரமேஷ் சவ்ஹான் தலைமையில் ஜெயந்தி சவ்ஹான் நிர்வாகத்தை கையில் எடுத்தார்.
டாடா குழுமம் பிஸ்லரி டீல்லிங் போல் தோல்வி அடைய கூடாது என திட்டமிட்டு Haldiram's நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை வாங்கினால் டாடா குழுமம் நேரடியாக பெப்சி மற்றும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்துடன் போட்டிப் போடும்.
இந்திய நிறுவனமான Haldiram's மக்கள் மத்தியில் ஏற்கனவே நீங்கா இடம் பிடித்திருக்கும் வேளையில், டாடா குழுமம் கைப்பற்றினால் அதன் வர்த்தகத்தை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும். Haldiram's ஏற்கனவே பெயின் கேபிடல் உள்ளிட்ட தனியார் பங்கு நிறுவனங்களுடன் 10% பங்குகளை விற்பனை செய்து முதலீடு திரட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Haldiram's நிறுவனத்தை வாங்க முயற்சி செய்வது டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் தான் சமீபத்தில் என் சந்திரே சேகரன் தலைமையிலான நிர்வாகம் அனைத்து டாடா குழுமத்தின் கீழ் இருக்கும் அனைத்து நுகர்வோர் நிறுவனத்தை இதன் கீழ் ஒன்றிணைந்தது.
டாடா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் பிரிட்டன் நாட்டின் பிரபலமான தேயிலை நிறுவனமான டெட்லி-யை வைத்துள்ளது. இதோடு இந்தியாவில் Starbucks உடன் கூட்டணி ஆகியவையும் இதன் கீழ் தான் உள்ளது. மேலும் 10 பில்லியன் டாலர் மதிப்பீட்டை செய்யும் Haldiram's நிறுவனம் ஆண்டு வருமானமாக சுமார் 1.5 பில்லியன் டாலரை பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தம் குறித்த செய்து பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் இன்று டாடா கன்ஸ்யூமர் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் புதன்கிழமை பிற்பகுதியில் வர்த்தகத்தில் 4% க்கும் அதிகமாக உயர்ந்தது. மேலும் Haldiram's நிறுவனத்தின் மதிப்பீடு மட்டும் சரியாக இருப்பின் டாடா குழுமம் 51 சதவீத பங்குகளும் அதிகமாக வாங்க தயாராக உள்ளது.


Click it and Unblock the Notifications