குஜராத்: ஸ்மார்ட்போன், லேப்டாப் முதல் செயற்கை நுண்ணறிவு பொருத்திய கருவிகள் வரை அனைத்து விதமான எலக்ட்ரானிக்ஸ் கருவிகளுக்கும் செமிகண்டக்டர் சிப்-கள் தான் முக்கிய பாகம், சொல்லப்போனால் இதுதான் அனைத்து எலக்ட்ரானிக்ஸ கருவிகளுக்கும் மூளையாக செயல்படுகிறது.
உலகளவில் தைவான் நாட்டில் தான் சிப் தயாரிக்கும் ஆலைகள் அதிகம் உள்ளன. உலகிற்கு தேவையான சிப்கள் பெரும்பாலானவை தைவானில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது சிப்களுக்கான தேவை அதிகரித்துள்ளதால் இந்திய நிறுவனங்கள் இந்த தொழிலில் இறங்க தீவிரம் காட்டுகின்றன.

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா, செமிகண்டக்டர் உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக தைவான் நாட்டு நிறுவனங்களுடன் கூட்டு அமைத்து இந்தியாவில் ஆலைகளை நிறுவும் பணிகளை டாடா தீவிரப்படுத்தியுள்ளது. முதல்கட்டமாக குஜராத்தின் தோலெரா பகுதியில் டாடா குழுமம் சிப் தயாரிக்கும் ஆலையை நிறுவுகிறது. தைவானை சேர்ந்த பிஎஸ்எம்சி நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆலை செயல்பட உள்ளது.
டெக்கேட் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி 1.25 லட்சம் கோடி மதிப்புள்ள மூன்று செமிகண்டக்டர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். காணொலி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன், குஜராத்தின் தோலெராவின் 91,000 கோடி மதிப்பில் நிறுவப்படும் செமிகண்டக்டர் ஆலை குறித்த தகவல்களை வெளியிட்டார்.
இந்தியாவின் வளர்ச்சிக்கு செமிகண்டக்டர் ஆலைகள் மிக முக்கியம் என கூறிய அவர், தைவானை சேர்ந்த பிஎம்எஸ்சி நிறுவனம் தங்களுடன் பல்வேறு தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். டிஜிட்டல்மயத்துக்கு அடிப்படையான தேவை செமிகண்டக்டர்கள் என்றும் இந்த துறையில் டாடா குழுமம் 50,000 வேலைவாய்ப்புகளை உருவாக்க இருப்பதாகவும், இது ஒரு தொடக்கம் தான் என்றும் தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்தியாவில் செமி கண்டக்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், இதற்காக நாம் வெளிநாடுகளை சார்ந்திருக்காமல் உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் என்ற யோசனை தோன்றியதாக கூறினார்.
செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு, பசுமை தொழில்நுட்பம், சுகாதாரம், ஆட்டோமொபைல் என அனைத்து துறைகளுக்கும் செமி கண்டக்டர் தேவைப்படுகிறது என்றும் சந்திரசேகரன் தெரிவித்தார்.
தோலெராவில் அமையும் ஆலையில் ஆண்டுக்கு 300 கோடி சிப்கள் தயாரிக்கப்படும் என உறுதி அளித்த அவர், மின்சார வாகனம், பாதுகாப்பு துறை, கன்சியூமர் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய துறைகளுக்கு முதல்கட்டமாக சப்ளை செய்யப்படும் என்றார்.
டாடா குழுமத்துடன் கை கோர்த்துள்ள தைவானின் பிஎஸ்எம்சி நிறுவனத்தின் தலைவர் ஃபிராங்க் ஹூவாங் கூறுகையில், தோலெராவில் முதலில் 28 நானோமீட்டர் சிப்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும், படிப்படியாக 22 நானோமீட்டர் சிப்கள் உற்பத்திக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மத்திய அரசும் செமிகண்டக்டர் ஆலைகளை இந்தியாவில் நிறுவ ஊக்கமளித்து வருகிறது. எனவே அடுத்த சில ஆண்டுகளில் சிப்கள் உற்பத்தி துறை வளர்ந்து வரும் துறையாக இருக்க போகிறது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications