டாடா குழுமத்தில் அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இந்தியா பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டுமெனில், வேலைகள் வளர்ச்சியை அடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவின் மறைவிற்கு பிறகு இளைஞர்களுக்கு மகிழ்ச்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டாடா குழுமம் ஆனது தற்போது செமிகண்டக்டர்கள், மின்சார வாகனங்கள், பேட்டரிகள் உள்ளிட்ட முக்கிய தொழில்களில் முதலீடு செய்துள்ளது. இவற்றில் அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் ஐந்து லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். டெல்லியில் இந்திய தர மேலாண்மை அறக்கட்டளை (IFQM)சார்பில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் என் சந்திரசேகரன், மத்திய அமைச்சர் அஷ்வினி வைஸ்னவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன், இந்தியாவின் தயாரிப்புகளின் உற்பத்தி, மக்களின் தரம், சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் செயல்முறைகளின் தரத்தை இந்தியா உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளதாக கூறினார். டாடா குழுமத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பணிக்கு வருவதாகவும், எனவே விரைவில் 100 மில்லியன் வேலைகளை உருவாக்க உள்ளதாகவும், அப்போதுதான், அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களை கொண்டு இந்தியா உலகின் மனித வள மூலதனமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், இந்தியாவிற்கான வாய்ப்பு மிகப்பெரியது என்றும், 'விக்சித் பாரத்' அதாவது வளர்ச்சிக்கான இந்தியா 100 ஆவது சுதந்திர தினமான 2047க்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக்கும் இலக்கை அடைய மத்திய அரசின் முன்முயற்சி ஆகும். 'விக்சித் பாரத் நல்ல பொருளாதார வளர்ச்சிக்கானது அல்ல என்றும், இது சமூக சமத்துவம், அனைத்து குடிமக்களின் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை அடைவதற்கானது என்றும் என் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
உலக அளவுகோலாக இருக்கும் தரம் மற்றும் சேவைகளின் நாடாக நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், பொருளாதார வளர்ச்சியை அடைய,வேலை வளர்ச்சியை அடைய வேண்டும் என்றும் கூறினார். உற்பத்தி மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கும் வெற்றி பெறுவதற்கும் IFQM அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது என்று டாடா சன்ஸ் தலைவர் கூறினார்.
மேலும், IFQM ஆனது உலகத் தரம், புத்தாக்கம் மற்றும் சிறப்பை அடைவதில் நிறுவனங்களை ஆதரிப்பது, வாடிக்கையாளர் திருப்தியை மேம்படுத்துதல் உள்ளிட்ட தர மேலாண்மைக்கான இந்தியாவில் முக்கியமானது என்றும், இது இந்தியாவில் தனிநபர் அளவை உயர்த்துகிறது என்றும், நுகர்வுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளில் தொடர்ந்து வளர்ச்சி இருக்கும் எனவும், அப்போது உலகின் உற்பத்தித் தேவைகளில் டாடா ஒரு குறிப்பிடத்தக்க நிறுவனமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து பேசிய, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்தியா அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான ஒரு பெரிய தூண் என்றும், கடந்த 10 ஆண்டுகளில் ஐஐடி, எய்ம்ஸ் மற்றும் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கைகள் இரட்டிப்பாகியுள்ளது என்றும் கூறினார்.
சமூக, டிஜிட்டல் மற்றும் இயற்பியல் உள்கட்டமைப்புகளில் முதலீடு முக்கியமானதாக இருக்கும் என்றும், UPI போன்ற தளங்கள் வளர்ச்சிடைவது நாளுக்கு நாள் அதிகரிப்பதாகவும், இந்தியாவில் உள்கட்டமைப்பு முன்னேற்றம் ஆனது காலாண்டு ஒருமுறை மாறி வருகிறது என்று குறிப்பிட்டார். ஆனால், சமூக உள்கட்டமைப்பு மேம்பாடு பற்றிய புரிதல் குறைவாக உள்ளதாக கூறிய அவர், உற்பத்திக்கான அடித்தளத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை கூறினார். இது உலகிற்கு அதிகம் தேவைப்படுவதாகவும், இந்தியாவிற்கு வேலைவாய்ப்பை உருவாக்க முக்கிய பங்காற்றுவதாகவும், கைப்பேசிகள், தொலைத்தொடர்பு சாதனங்கள் போன்றவற்றின் பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா மாறியுள்ளது என்று கூறியுள்ளார்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!



Click it and Unblock the Notifications