இந்திய அரசுக்கு சொந்தமான விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா அதிகளவிலான கடனில் இருக்கும் காரணத்தால் இதைப் பல முறை விற்பனை செய்ய முயற்சி செய்து மத்திய அரசு தற்போது டாடா குழுமத்திற்கு விற்பனை செய்துள்ளது.
இந்த விற்பனையில் ஏர் இந்தியா வைத்திருந்த கொச்சி விமான நிலையத்தின் பங்குகளையும் டாடா குழுமம் பெற உள்ளது. இது ஏர் இந்தியா விற்பனை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு இருந்தாலும் வெளியில் தெரியாமல் இருந்தது, இந்தியாவின் 3வது மிகப்பெரிய விமான நிலையத்தின் பங்குகளை டாடா குழுமம் தற்போது பெற உள்ளது.
கொச்சி விமான நிலையம்
தென்னிந்தியப் பகுதிகளிலேயே கொச்சி விமான நிலையம் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. வெளிநாட்டுப் பயணிகள் பிரிவில் இந்தியாவில் இருந்து மேற்கு ஆசிய நாடுகளை அதிகளவில் இணைக்கும் விமானச் சேவைகளைக் கொச்சி விமான நிலையத்தில் இருந்து அளிக்கப்படுகிறது.
வளைகுடா நாடுகள்
கொச்சி மற்றும் கேரளா முழுவதும் வளைகுடா நாடுகளில் அதிகளவிலான வெளிநாட்டு ஊழியர்கள் இருக்கும் காரணத்தால் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது. வருடம் முழுவதும் வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் மலையாளிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால் கொச்சி விமான நிலையம் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
இண்டிகோ, ஏர் இந்தியா
இண்டிகோ, ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணைந்து கொச்சி விமான நிலையத்தில் இருந்து ஜெட்டா, துபாய், அபுதாபி, ரியாத், ஷார்ஜா, தோஹா, குவைத் போன்ற பல நாடுகளுக்கு விமானச் சேவை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏர் இந்தியா மட்டுமே
இவ்வளவு முக்கியமான கொச்சி விமான நிலையத்தில் ஓரே ஓரு விமானச் சேவை நிறுவனம் தான் பங்குகளை வைத்துள்ளது, அது ஏர் இந்தியா மட்டுமே. தற்போது ஏர் இந்தியா-வை டாடா குழுமம் வாங்கும் காரணத்தால் கொச்சி விமான நிலைய பங்குகளைத் தற்போது டாடா குழுமம் பெற உள்ளது.
ஏர் இந்தியா விற்பனை
ஏர் இந்தியா விற்பனையில் ஏர் இந்தியா கட்டுப்பாட்டில் இருந்த பல அரசு நிறுவனப் பங்குகள் அனைத்தும் Air India Asset Holding Limited (AIAHL)க்கு மாற்றப்பட்ட நிலையில் கொச்சி விமான நிலைய பங்குகளை மட்டுமே டாடா குழுமம் பெற உள்ளது. இதன் மூலம் ஏர் இந்தியா வைத்திருந்த 3 சதவீத பங்குகளை டாடா குழுமம் பெற உள்ளது.
முக்கிய நிறுவனங்கள்
இதன் மூலம் கொச்சி விமான நிலையத்தில் டாடா குழுமத்தைத் தாண்டி, எஸ்பிஐ, பார்த் பெட்ரோலியம், HUDCO ஆகியவை இணைந்து சுமார் 10 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இதேபோல் கேரளா-வை சேர்ந்த ஒரு மசாலா வியாபாரி, மாநில வங்கி, அபுதாபி-ஐ சேர்ந்த ஒரு பில்லியனர் ஆகியோரும் கொச்சி விமான நிலையத்தில் பங்குகளை வைத்துள்ளனர்.
டாடா திட்டம் இதுதானா..?
கொச்சி விமான நிலையத்தில் டாடா குழுமம் வைத்திருக்கும் பங்கு அளவீடு வெறும் 3 சதவீதமாக மட்டுமே இருந்தாலும், இதை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதேபோல் இந்தியாவில் பிற விமான நிலையங்களை மத்திய அரசு 50 வருடம் அடிப்படையில் குத்தகைக்கு விடத் திட்டமிட்டு வரும் நிலையில் டாடா குழுமம் இதில் பங்குபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications